உலகம் முழுதிலும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் குற்றச்சாட்டு, கரோனா தொற்றின் போதும், உடலினுள் நுழைய வைரசிற்கு ஆதாரமாக பயன்பட்ட ஸ்பைக் புரதத்தை அழிக்க தடுப்பூசி போட்ட பின்னும், ஸ்பைக் புரதம் அழியாமல் அப்படியே இருக்கிறது என்பது தான்.
உடலின் பல்வேறு உள்ளுறுப்புகளில் ஸ்பைக் புரதம் உயிர்ப்புடன் இருப்பதாகவும், அழற்சியை ஏற்படுத்துவதிலும், திசுக்களில் சிதைவை ஏற்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிப்பதாகவும் பன்னாட்டு அளவில் அனுபவம் மிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கரோனா வைரசின் வெளிப்புற அடுக்கில் குச்சி போன்று நீட்டியிருக்கும் சீரான அமைப்பு டன் உள்ள ஸ்பைக் கிளைக்கோ புரதம், தொற்றை ஏற்படுத்த உதவுகிறது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 15 மாதங்களுக்கு மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேரின் நோய் எதிர்ப்பு செல்களில் ஸ்பைக் புரதம் அழியாமல் அப்படியே இருப்பது தெரிய வந்துள்ளது.
தடுப்பூசி போட்ட பின்னும், குருதியில் உள்ள ரிசெப்டார்களில் இணைந்து, உடல் முழுதும் சென்று பல்வேறு உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல்வேறு விதமான செல்கள் சேர்ந்த வெள்ளை அணுக்களின் குழுமம் தான் பொதுவான நோய் எதிர்ப்பு செல்கள். இது தவிர, எலும்பு மஜ்ஜை, நிணநீர் கட்டி, இரைப்பையின் உள்பகுதியில் இருக்கும் மியூக்கஸ் சவ்வு, மண்ணீரல் போன்றவற்றிலும் நோய் எதிர்ப்பு செல்கள் உள்ளன.
கரோனா வைரஸ் உடலில் நுழைந்ததும், நோய் எதிர்ப்பு செல்களை அதீத அழுத்தத்திற்கு உட்படுத்தி பலவீனமாக்குகிறது. இதனால் தொடர்ச்சியாக சளி, இருமல், அயர்ச்சி, வழக்கத்தை விடவும் மெதுவாக காயங்கள் ஆறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
கரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின், தலை முடி உதிர்வதும், தலையின் மேல்புறம் உள்ள தோல் மென்மையாவதும், உலகம் முழுதிலும் உள்ள பெண்களிடம் காணப்படும் பொதுவான பிரச்சினையாக உள்ளது.
சத்தான உணவு சாப்பிட்டு, ஆழ்ந்த தூக்கம், உடற்பயிற்சி, உடல் பருமன் இல்லாமல், மது, சிகரெட் பழக்கத்தை தவிர்ப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக மனப் பதற்றம் இருக்கவே கூடாது.
No comments:
Post a Comment