கன்னியாகுமரி, மார்ச் 6- கன்னியாகுமரியில் கடலின் நடுவேயுள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று (6.3.2023) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே 133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்தார்.
கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் அப்படியே திருவள்ளுவர் சிலைக்கும் சென்று பார்வையிட்டு வந்தனர்.
கடலின் நடுவே உள்ள சிலை உப்புக்காற்று, மழை, வெயில் போன்றவற்றால் பாதிக்கப்படும் என்பதால் நான்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலை சுத்தம் செய்யப்பட்டு ராசயன கலவை பூசப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட பின்னர் 5 ஆவது முறையாக ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. எனவே சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு அனுமதிக்கப்பட வில்லை. சுமார் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் ரசாயன கலவை பூசும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வந்த ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்ததை அடுத்து புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும் திருவள்ளுவர் சிலையை இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment