அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை,மார்ச் 22- தமிழ் நாட்டில் விளை யாட்டு நகரம் அமைய உள்ள இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள் ளார். வரலாற்று சிறப்பு மிக்க விக்டோரியா பொது அரங்கம் சிங்கார சென்னை 2.ளி திட்டத்தின் கீழ் தொன்மை மாறாமல் மறுசீரமைக்கப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா வில் அமைச்சர்கள் கே. என்.நேரு உடன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி நேரு மைதானத்தை மறு சீரமைக்க நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள் ளதாக கூறினார்.
நேரு விளையாட்டு அரங்கின் விளக்குகளை மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் உதயநிதி தெரிவித்தார். விளையாட்டு நகரம் அமைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப் பதாக கூறிய அவர் இதில் விரைவில் ஒரு இடம் உறுதி செய்யப் பட்டு பணிகள் தொடங்கப் படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment