மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முதியவர் அடித்துக்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முதியவர் அடித்துக்கொலை

பாட்னா, மார்ச் 11 மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முதியவர் மீது ஒரு கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. 

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த கடந்த 7.3.2023 அன்று தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்ப வருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, ஜோகியா கிராமத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அருகே நசீம், போரோஷ் ஆகி யோரை ஒரு கும்பல் இடைமறித்து, மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகமடைந்து இருவரிடமும் அந்தக் கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் தாங்கள் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் அந்தக் கும்பல் நசீம், போரோஷ் மீது கடுமையாகத் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த போரோஷ் அந்த கும்பலிடமிருந்து தப்பியோடினார். 

ஆனால், நசீமை சுற்றி வளைத்த அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கிய பின்னர் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். படுகாயங்களுடன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நசீமை காவல்துறையினர்  மருத்துவமனையில் அனு மதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் நசீம் குரேஷி சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்  மாட்டு இறைச்சி வைத் திருந்ததாக சந்தேகத்தில் முதியவரை அடித்துக் கொன்ற சுஹில் சிங், ரவி ஷா, உஜ்வால் சர்மா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment