சென்னை, மார்ச் 5 தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள பீகார், ஜார்க் கண்ட் மாநில அரசுகள் குழு அமைத்துள்ளன.
பீகார் மாநில குழுவில் அம்மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில், சிறப்புச் செயலாளர் அலோக்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் கண்ணன் உள்ளிட்ட 4 பேரும், ஜார்க்கண்ட் மாநில குழுவில் காவல்துறை தலைமை இயக்குநர் தமிழ்வாணன், தொழிலாளர் நல இணை ஆணையர் ராகேஷ் பிரசாத், தொழிலாளர் கண்காணிப்பாளர் அபிஷேக் வர்மா, மாநில புலம்பெயர் தொழிலாளர் நலன் பிரதிநிதிகள் ஆகாஷ் குமார், சிக்கா ஆகிய 5 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் சென்னையில் தமிழ் நாடு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் மற்றும் அதிகாரிகள், வெளி மாநில குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பால முருகன், தாக்குதல் தொடர்பான காட்சிப் பதிவுகளில் உண்மையில்லை என்பதை புலம்பெயர் தொழிலாளர்கள் உணரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment