புரட்சித்தாய் நீயே ஆனாய் ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

புரட்சித்தாய் நீயே ஆனாய் !

அன்னை மணி அம்மா நின்போல்

இன்னொருவர் பிறப்ப தில்லை

எண்ணஞ்சொல் செயலு மான

நின்னை என்றும் மறப்ப தில்லை


எளிமைக்கோர் இலக்கண மானாய்

உரிமைப்போர் முழக்கமே ஆனாய்

வலிமைக்கோர் இருப்பே ஆனாய்

வாய்மைப்போர்க் களமாய் ஆனாய்


அன்புக்கோர் எல்லை ஆனாய்

அரவணைப்பில் சிகரம் ஆனாய்

பண்பிலுயர் இமய மானாய்

பாசநிறை கடலு மானாய்


தந்தைபெரி யாரைக் காத்த

தாயாகித் தாதியு மானாய்

இந்தப்பே ருலகம் காணா

இயக்கத்தின் காவலர் ஆனாய்


நாத்திகத்தின் தலைவ ரானாய்

சாத்திரத்தின் வைரி யானாய்

போர்க்குணத்தில் பெரியா ரானாய்

புரட்சித்தாய் நீயே ஆனாய்!


இராவணரைச் சிறக்க வைத்தாய்

இராமனுக்கே நெருப்பு வைத்தாய்

திராவிடத்தின் தனித்துவத் தாய்

தென்றிசையை நோக்க வைத்தாய்


ஆரியத்தை அலுங்க வைத்தாய்

அடிவயிற்றைக் கலங்க வைத்தாய்

வீரியத்தை விளங்க வைத்தாய்

வேதியத்தை மழுங்க வைத்தாய்


துன்பம் துயர் தாங்கி நின்றாய்

துரோகங்கள் எதிர்த்து வென்றாய்

மன்பதைக்கே எடுத்துக் காட்டாய்

மாண்பனைத்தும் பெற்ற நற்றாய். 


வீரமணி துலங்க வைத்தாய்

வெற்றிமணி ஒலிக்க வைத்தாய்

பாரெங்கும் முழங்க வைத்தாய்

பெரியாரைப் புழங்க வைத்தாய்

- கவிஞர் பெரு. இளங்கோ


No comments:

Post a Comment