சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, சாரதா நம்பி ஆரூரான், வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்.பி. பேசியதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வெற்றி பெற்றது நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. இந்த வெற்றியை தடுப்பதற்கு சிலர் குறுக்கு வழிகளை செய்தாலும், அதனையெல்லாம் முறியடித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். ஜாதி, மதம், இனம் அனைத்திலும் ஒன்றுபட்டு சுதந்திரம் பெற்ற நம் இந்தியா, இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயகம் பறிக்கப்பட்டு, மக்களின் வெறுப்பு அரசியலாக ஒன்றிய அரசின் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கு அடித்தளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அமைந்துள்ளது.
படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கிய புதுமை திட்டத்தை உருவாக்கி, தந்தை பெரியாரின் கனவை நினைவாக்கியதுதான் முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி. உறவுக்கு கை கொடுப்போம், உணர்வுக்கும், உரிமைக்கும் குரல் கொடுப்போம். சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், சென்னை மாநகர மேயர் பிரியா, திருவிக நகர் மண்டல குழு தலைவர் சரிதா, வில்லிவாக்கம் பகுதி திமுக செயலாளர் வாசு, மகளிர், தொண்டர் அணி செயலாளர் ராஜேஸ்வரி சிறீதர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பக்கிங்காம் கால்வாயில் புனரமைப்பு பணியை தொடங்க வேண்டும்
அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
சென்னை, மார்ச் 4- பக்கிங்காம் கால்வாய் மத்திய பகுதி புனர மைப்பு பணிகளை உடனடியாக தொடங்க அதிகாரிக ளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். நீர்வளத் துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப் படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன் னேற்றம் மற்றும் 2023-2024ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ள திட்டங்கள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலை மையில் ஆய்வு கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் சரபங்கா திட்டம், தாமிரபரணி - கரு மேனியாறு இணைப்பு திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், மற்றும் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அப்பணிகளை விரைவில் முடிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், முதற்கட்டமாக பக்கிங்காம் கால்வாயின் மத்திய பகுதி புனரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கவும், நடந்து வரும் பணி களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண் டுமென்று அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் உடனடியாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக திட்ட மதிப்பீடுகளை தயார் செய்யுமாறு அமைச் சர், அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை செயலாளர்கள் சந்தீப் சக்சேனா, ரா.கண் ணன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராம மூர்த்தி, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராம மூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளி தரன், கோயம்புதூர் மண்டல தலைமை பொறியாளர் முத்துசாமி, மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஞானசேகரன், திட்ட உருவாக்கம் தலைமை பொறியாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment