புதுடில்லி, மார்ச் 18 மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி பெரும் பான்மை இழந்தது. இதைத் தொடர்ந்து மகராட்டிர மாநிலத் தின் அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டப்பேரவையில் பெரும் பான்மையை காட்ட உத்தவ் தாக் கரேவிற்கு உத்தரவிட்டார். பெரும் பான்மை இல்லாத நிலை இருந்த தால் உத்தவ் தாக்கரே தனது முதல மைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து, பாஜக ஆதர வுடன் சுஷில்குமார் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவ்விவகாரம் தொடர் பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி ஒய் சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆளுநரின் செயல்பாடு குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. உச்ச நீதிமன்றம் கூறுகையில், ஆளுநர் தனது அதி காரத்தை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது அரசாங்கம் கவிழும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் கூறியது.மேலும், கட்சிக் குள் இருக்கும் வேறுபாடு காரண மாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதாக அரசாங் கம் கவிழ்வதற்கு வழி வகுக்கும் என்று கூறியது. இந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 2022ஆம் ஆண்டு மகாராட்டிராவில் நடந்த அரசியல் குழப்பத்தையும், அதைத் தொடர்ந்து ஆளுநர் எடுத்த நடவடிக்கைகளையும் விளக்கம் அளித்து வாதிட்டார். அப்போது நீதிபதிகள் கூறும்போது,' கட்சி கொள்கை, வளர்ச்சி நிதி ஒதுக்குதல் உள்ளிட்டவை தொடர் பாக ஒரு கட்சி சட்டமன்ற உறுப் பினர்களுக்கு மத்தியில் வேறு பாடுகள் ஏற்படலாம்.தங்கள் தலைவர் மீது சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் வேறு ஒரு தலைவரை மாற்றியிருக்கலாம். ஆனால் கட்சியில் அதிருப்தி நிலவு வதால் முதலமைச்சர் கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்ள வேண்டும் என்று ஆளுநர் சொல்ல முடியுமா? நாங்கள் ஆளு நரின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆனால் ஒரு அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடுவதற்கு இது போதுமானதா இருக்குமா? ஆனால், பிரச்சினை என்னவெனில் ஒரு அரசாங்கம் கவிழ்வதற்கான நடவடிக்கையை ஆளுநர் துரிதப் படுத்தக்கூடாது என்பதே.ஏனெ னில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தர விடுவது தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை கவிழ்க்கத்தான் உதவும் வகையில் இருக்கும். மக்கள் தான் ஆளும் கட்சியை தூக்கி எறி வார்கள். ஆனால் ஆளுநரால் இங்கு ஆளும் அரசு கவிழ்க்கப்படு வது ஜனநாயகத்திற்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய காட்சியாக அமை யும்" என்றனர். மேலும் மூன்று கட்சிகள் அடங்கிய கூட்டணியில் ஒரு கட்சிக்குள் அதிருப்தி நிலவு கிறது என்ற உண்மையையும் ஆளு நர் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கூறி னர். இந்த வழக்கின் வாதங்கள் இன்றும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment