புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பா.ஜ.க.வினரின் தவறான பதிவு - ஒன்றிய அரசு பதிலளிக்கவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பா.ஜ.க.வினரின் தவறான பதிவு - ஒன்றிய அரசு பதிலளிக்கவேண்டும்

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கேள்வி!

பாட்னா, மார்ச் 7 புலம்பெயர் தொழி லாளர் விவகாரத்தில், ஒன்றிய பா.ஜ.க. அரசு இது வரை எடுத்த அக்கறை என்ன? புலம் பெயர் தொழிலாளர் நல னில் பா.ஜ.க.வின் பங்குதான் என்ன? என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலை வரும் பீகார் துணைமுதலமைச்சருமான தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார். 

பாட்னாவில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்திருக்கும் பேட்டியில் தேஜஸ்வி  கூறியிருப்ப தாவது: 

பீகார் மாநிலத்தில் யாரோ ஒருவர் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண் டால் அதை ஒட்டுமொத்த மாநிலத்துக்கு மான பொதுக்குணமாக அடையாளப் படுத்தக் கூடாது. அங்கொன்றும் இங் கொன்றுமான நிகழ்வுகளின் அடிப் படையில் பொதுவான அனு மானங்கள் கூடாது. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது. தமிழ்நாடு அரசும் சகித்துக்கொள்ளாது.  

பீகார் மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக எந்த தாக்குதலும் நடை பெறவில்லை என தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் என்னிடம் அளித்த தகவலில் உறுதிப்படுத்தினார். இடம் பெயர்ந்த தொழிலாளர்கள்மீது  வன் முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக எழுந்த புகார்களை மறுத்து தமிழ்நாடு  காவல்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையையும் நான் சட்டப்பேரவை யில் வாசித்தேன். மேலும், முழுமையாக விசாரிக்க பீகார் மாநில அரசு சார்பில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பினோம். தமிழ் நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரி கள் விரிவாக ஆய்வு செய்துள்ளார்கள். 

அதேநேரம், புலம்பெயர் தொழிலா ளர்கள் நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் ஒன்றியத்தில் ஆட்சி யிலும், மாநிலத்தில் எதிர்க்கட்சியாகவும் உள்ள பா.ஜ.க.வின் பங்கு குறித்து விவாதிக்க வேண்டும். இரு மாநிலங்கள் தொடர்புடைய இவ் விவகாரத்தில் ஒன் றிய பா.ஜ.க. அரசு இதுவரை எந்த  அக்கறையும் காட்டிய தாகத் தெரியவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரே, பீகார்  பா.ஜ.க. தலை வருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தங்கள் மாநிலத்தில் (தமிழ்நாட்டில்) புலம்பெயர்  தொழிலா ளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல்களை மறுத்திருக்கி றார் என்பது பத்திரிகையில் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தவறான தகவல்களை, ஆத்திர மூட்டும் வார்த் தைகளை டுவிட்டரில் வெளியிட்டது தொடர்பாக வழக்குப் பதிவாகி உள்ள தாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு, பா.ஜ.க. நிச்சயம் பதிலளிக்க வேண்டும். 

இவ்வாறு தேஜஸ்வி குறிப்பிட் டுள்ளார்.

No comments:

Post a Comment