சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்
புதுதில்லி, மார்ச் 11- 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டின் தனி நபர் வருமானம் 98.5 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளதாக மோடி அரசின் தரப் பில் வெளியான அறிக்கை உண்மையா னது அல்ல; இந்த 98.5 சதவீத வளர்ச்சி யானது 2014-ஆம் ஆண் டிற்கு முன்பு காணப்பட்ட 157 சதவீதத்தை விட மிகக் குறைவானது என்றும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மறைத்து மோடி அரசு பொய்ப் பிரச்சாரம் செய்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
தனிநபர் வருமானம்
தனிநபர் வருமானம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நபர் ஈட்டிய சராசரி வருமானத்தின் அளவீடு ஆகும். இது மொத்த வருமானத்தை அதன் மொத்த மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இதுதான் தனிநபர் வரு மானம் என்ற நிலையில், நாட்டின் தனிநபர் தேசிய வருமானம் (தற்போ தைய விலையில்) 2014-2015-ஆம் ஆண்டு ரூ.86,647 ஆக இருந்த நிலை யில், தற்போது ரூ.1,72,000 ஆக அதாவது 98.5 சதவீதம் அதிகரித்துள்ளது என சில தரவுகளைக் குறிப்பிட்டு ஓர் அறிக்கை வெளி யாகியுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு பெருமையாக கூறி னாலும், உண்மை நிலவரங்களை உற்று நோக்கினால் பல்வேறு அதிர்ச்சிகளே மிஞ்சுகின்றன.
ஒரு நாளைக்கு
ரூ.3,608 கோடி சொத்து
சம்பாதித்த பணக்காரர்கள்
“தற்போதைய விலையிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தி பார்க்கப்படு கிறது. ஆனால் பணவீக்கத்தைக் கணக் கிட்டால், தனி நபர் வருமானம் என்பது மிகவும் குறைவாகத்தான் உள்ளது. தனிநபர் வருமான அதிகரிப்பு என்பது மக்கள்தொகையில் மேல்மட்டத்தில் உள்ள முதல் 10 சதவீதம் பேரிடம்தான் நிகழ்ந்துள்ளது. கரோனா தொற்றுநோய்க் குப் பிறகு நாட்டில் பணக்காரர்களுக்கும், ஏழை களுக்கும் இடையே விரிவடையும் இடைவெளி பெரிதாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் மேல் மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேர் 40.5 சதவீதத்திற்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்டி ருந்தனர்; அதே சமயம் அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதம் அல்லது 70 கோடி மக்கள் மொத்த சொத்தில் வெறும் 3 சத வீதம் மட்டுமே கொண்டுள்ளனர் என்று ‘ஆக்ஸ்பாம் இந்தியா’வின் அறிக்கை கூறுகிறது. தொற்றுநோய் காலங்களில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி ஒரு நாளைக்கு ரூ.3,608 கோடி அள வில் (121%) சொத்து உயர்ந்தது. எனவே ஒரு நாட்டில் தனிநபரின் வருமானம் அதிகரித் திருந்தால் ஒட்டுமொத்த மக்களின் வரு மானமும் அதிகரித்திருக்கிறது என்று அர்த்தமில்லை. ஒரு நகரத்தில் மொத்தம் 50 பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம் பாதிக்கிறார்கள்; மேலும் 1,000 பேர் ஆண்டுக்கு ரூ. 25,000 சம்பாதிக்கிறார்கள். தனிநபர் வருமானத்தை (ரூ. 5,00,000 ஙீ 50) + (1,000 ஙீ ரூ. 25,000) எனக் கணக்கிட் டால் மொத்த வருமானம் ரூ. 50,000,000 ஆக இருக் கும். ரூ.50,000,000/1,050 (மொத்த மக்கள் தொகை) என்று பிரித் தால், நகரத்தின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.47,619 என பொருளா தார நிபுணர் பேரா.ஜெயதி கோஷ் விளக்கு கிறார்.
தேசிய வருமானத்தில் சேர்க்கப்படவில்லை
“தற்போது வெளியாகியுள்ள தனிநபர் வருமான தரவுகள் தேசிய வருமானத்தில் சேர்க்கப்படவில்லை. இந்தியாவில் 6 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே ஒழுங் கமைக்கப்பட்ட துறையில் அதாவது முறைசார் துறைகளில் வேலை செய்கிறார்கள். மீதமுள்ள 94 சதவீதம் முறைசாரா துறையில் பணிபுரிகின்றனர். கார்ப்பரேட் உள்ளிட்ட மேல் மட்டத்தில் மட்டுமே வருமானம் உயர்ந்து வருகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர் களின் சொத்து அதிகரித்திருக்கலாம். ஆனால் கீழே உள்ள 90 சதவீத தொழி லாளர்கள் நிலைமை மேல் மட்டத்தைப் போன்றது அல்ல. முக்கியமாக கீழ் மட்டத்தில் உள்ள 90 சதவீத தொழிலா ளர்களின் தரவுகளை சேகரிப்பதே அரிது. இந்தி யாவின் முறைசாராத் துறை மிகப் பெரியது. இதில் சுமார் 11 கோடி விவசாயிகள், 97.5 சதவீதம் சிறு குறு தொழில் துறையில் பணிபுரியும் தொழி லாளர்கள் உள்ளனர். முறைசார் துறை களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழி லாளர்களின் வருமானம் குறித்த தரவு களின் படியே இப்போது தனிநபர் வரு மானம் கணக்கிடும் நிலை உள்ளது என ஓய்வுபெற்ற ஜேஎன்யு பேராசிரியர் அருண்குமார் கூறுகிறார்.
தரவுகள் தவறானவை
“2022-2023 நிதியாண்டின் முதல் பாதியில் குடும்பங்களின் நிகர நிதிச் சேமிப்பு மூன்று பத்தாண்டுகளில் இல் லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் கடன் வாங்கி யிருக்கலாம். மொத்த உள்நாட்டு உற் பத்தி தரவு சரியாக இல்லை; ஏனெனில் முறைசாரா துறை யின் வருவாய் சரிவை கணக்கிடவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவும், தனிநபர் வருமான கணக்கீடும் தவறானவை” என மோதி லால் ஓஸ்வால் செக்யூரிட்டீஸ் எனும் ஆய்வு அமைப்பு தனது 2023 ஜனவரி அறிக்கையில் கூறியுள்ளது.
ஒட்டுமொத்த மக்களின் வருமானம் அதிகரித்திருப்பதாக அர்த்தமில்லை
ஒரு நாட்டின் தனிநபர் வருமானம் அதி கரித்துள்ளதென்றால், ஒட்டு மொத்த மக்களின் வருமானம் அதிகரித்திருப் பதாக அர்த்த மில்லை. இந்தத் தரவு எப்போதும் வாழ்க்கைத் தரத்தின் துல்லியமான பிரதிபலிப்பை வழங்காது. இது வருமான சமத்துவமின்மையையும் கணக்கில் கொள்ளாது. தனிநபர் வரு மானம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண் டில் ஒரு குறிப் பிட்ட பகுதியில் ஒரு நபர் ஈட்டிய சராசரி வரு மானத்தின் அளவீடு ஆகும். இது அப்பகுதியின் மொத்த வரு மானத்தை அதன் மொத்த மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது என தொழில்துறை வளர்ச்சிக்கான ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர் நாகேஷ்குமார் விளக்குகிறார்.
மோடி அரசின்
பிரச்சாரம் பொய்
இந்நிலையில், தனிநபர் வருமானம் அதிகரிப்பு குறித்த மேற்கூறப்பட்ட ஆதார அறிக்கைகளை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி தமது டுவிட்டர் பக்கத்தில், "2014-2015இல் இருந்து மக்களின் வருமானத்தை இரட் டிப் பாக்கிவிட்டதாக மோடியின் பிரச் சாரமும் தற்போதைய தரவும் பொய்யான கூற்றையே உருவாக்குகிறது. தனிநபர் வருமானத்தின் 98.5 சதவீத வளர்ச்சியா னது 2014க்கு முந்தைய ஆண்டுகளில் காணப்பட்ட 157 சதவீதத்தை விட மிகக் குறைவு என்பதை மறைக்கிறது. உண்மை யான பணவீக்கத்தின் அடிப்படையில் தனிநபர் வருமான வளர்ச்சி 2014-ஆம் ஆண்டுக்கு முன்னர் 42 சதவீதம் ஆக இருந்த நிலையில், தற்போது 35 சதவீதம் ஆக குறைந்து உள்ளது. தனிநபர் வரு மானத் தரவுகள், அதிக அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மறைக் கின்றன. உண்மையில் நாட்டில் பணக் காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள்” எனக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment