பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது

வல்லம், மார்ச் 4- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்)  2022-2023ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விரு தினை பெற்றுள்ளது.

இவ்விருது  எஸ்.எஸ்.இன்போ டிவி, சென்னை 26.02.2023 அன்று மேனாள் உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணனால் வழங்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் சமூகத்தில் பின் தங்கிய மாணாக்கர்களுக்கு, கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றி வருவ தாலும், தம்மை சுற்றியுள்ள 67 கிராமங்களை தத்தெடுத்து கல் விப் பணி, விழிப்புணர்வு,  மருத் துவப் பணி மற்றும்  பொருளா தாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு சேவை ஆற்றி வருவதாலும், 

மேலும் இந்நிறுவனத்தின் உள்கட்டமைப்புகளான ஆய் வுக்கூடங்கள், சிறப்பு ஆய்வுக் கூடங்களின் (ரேபோடிக்ஸ், ஆட்டோமேஷன், நெக்ஸ்ட் ஜெனேரேசன், நெட் வெர்க்) வசதிகள், பேராசிரியர்கள், மய்ய நூலகம், டிஜிட்டல் நூலகம், துறை சார்ந்த நூலகங்கள், மாண வர்களுக்கென பிரத்தியேக ஆலோ சனை மய்யம், விளையாட்டுக் கூடங்கள், தங்கும் விடுதிகள்,  மாணாக்கர்களின் கருத்துகள், மற்றும் சிறப்பு வசதிகளோடு 24 மணிநேர மருத்துவமனை, ஓட்டுநர் பயிற்சி, உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளதாலும், கூடு தலாக மாணவர்களின் திறமை களை வெளிக்கொணரும் சங் கம்,  மற்றும் சொசையிட்டின் செயல்பாடுகள், நாட்டு நலப் பணித்திட்டம், தேசிய மாணவர் படை, தேசிய கப்பல் படை, தேசிய விமானப்படை, செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் விளையாட்டு துறை ஆகியவற்றின் செயல் பாடுகளின் அடிப்படையிலும்,

இந்நிறுவனத்தின் தனித்து வமான செயல்பாடுகளாகிய நீர் மறுசுழற்சி மேலாண்மை, கழிவை காசாக்கும் திட்டம், ஜீரோ கார்பன் வளாகம், திடக் கழிவு மேலாண்மை, பயன்படுத் திய பேப்பர் மற்றும்  பொருட்கள் மறுசுழற்சி மய்யம்,  தொழில் முனைவோரை உருவாக்குவதற் கான உள்கட்டமைப்போடு கூடிய பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகம் (Periyar TBI)  ஆகியவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையிலும் மற்றும் “எஸ்.எஸ்.இன்போ டிவி, சென்னை'' அமைத்த சிறந்த வல்லுநர்களின் குழுக்களால் பரிந்துரை செய்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment