ஸ்டாக்ஹோம்,மார்ச்14- வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவன ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரை உலக அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சவூதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பாகிஸ்தான் 8-ஆவது இடத்தில் உள்ளது. அந்நாட்டுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் பிரதான நாடு சீனா.
2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஏற்றுமதி செய்த மொத்த ஆயுதங்களில் 30 சதவீதத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவுக்கு அதிக ஆயுதங் களை விநியோகிக்கும் நாடுகளில் ரஷ்யாவுக்கு அடுத்த படியாக அமெரிக்கா இருந்த நிலையில், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்துக்கு பிரான்ஸ் வந்துள்ளது. அதேவேளையில், இந்தியாவுக்கு ரஷ்யா ஆயுதங்களை விநியோகிப்பது குறைந்து வருகிறது.
ஆயுதங்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment