திண்டிவனத்தில் அரசு மருத்துவமனை கட்டும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

திண்டிவனத்தில் அரசு மருத்துவமனை கட்டும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்

விழுப்புரம், மார்ச் 5- திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும்பணியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில், நாடாளுமன்ற விழுப்பு ரம் மக்களவை தொகுதி உறுப்பினர் து.ரவிக்குமார், மயிலம் சட்ட மன்ற உறுப்பினர் ச.சிவக் குமார் ஆகியோர் முன்னி லையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறியதாவது: திண்டிவனம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தரைத் தளம் மற்றும் அய்ந்து தளங்கள் தலா 1935.00 ச.மீ பரப்பளவு வீதத்தி லும், சாய்தள பரப்பு 700.00 ச.மீ, இணைப்பு பகுதி 95.00 ச.மீ என மொத்தம் 12,475 ச.மீ பரப்பளவில் அமைய வுள்ளது. இரண்டாம், மூன்றாம் மற்றும் நான் காம் தளங்களில் 1,000 ச.மீ பரப்பளவில் மகப்பேறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கட்டடமும், தரைத்தளத்தில் 166.00 ச.மீ பரப்பளவில் பிணவறைக்கட்டமும், 63.00 ச.மீ பரப்பளவில் எச்.டி அறையும் கட்டப்பட்டவுள்ளது. இதன் மூலம், இப்பகுதியினை சேர்ந்த பொதுமக்களுக்கு உயர்ரக மருத்துவ வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலா, திண்டிவனம் சரர் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, அரசு தலைமை மருத்துவர் மரு.சாந்த குமார், நகர்மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி, திண்டிவனம் நகராட்சி ஆணையர் தட்சிணா மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment