தஞ்சை, மார்ச் 16- 12.3.2023 அன்று தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மருங்குளம் அறிவுச்சுடர் ஆங்கிலப் பள்ளியின் மேற் பார்வையாளருமான நடுவூர் அரும்பலைச் சேர்ந்த ஆ.ம.இரமேஷ்க்கும், வல்லம் ச.அ.சங்கவிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ஆல்வின் திருமண அரங்கில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்
சி.அமர்சிங் தலைமையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் வாழ்த்துரை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
திராவிடர் கழகக் கலைத்துறை செய லாளரின் அணுகு முறையாலும், மாப்பிள்ளை யின் கொள்கை உறுதிப்பாட்டாலும், இரு வீட்டார்களின் விட்டுக் கொடுக்கும் பண் பாலும், எந்தவித மூடச்சடங்குகள், சம்பிர தாயங்கள் ஏதும் இன்றி, வாழ்க்கை துணைநல உறுதிமொழியேற்று, தந்தை பெரியார் கொள்கை வழியில் சிறப்பாக நடைபெற்றது.
மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் வரவேற்புரையாற்றி னார். மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் ஒருங்கிணைப்பு உரையாற் றினார்.
திராவிடர் கழக வெளியுறவுத் துறை செய லாளர் கோ.கருணாநிதி, மாநில திராவிடர் கழக அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில வீதிநாடக அமைப்பாளர் பி.பெரியார் நேசன், மாநில ப.க. ஊடகத்துறை செயலாளர் மா.அழகிரிசாமி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக் குமார், மாநில கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் (தி.மு.க.) நடுவூர் கு.செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் மருங்குளம் ந.அறிவுடைச்செல்வன், (தி.மு.க.), மண்டல கழக இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, அறிவுச்சுடர் பள்ளி நிர்வாகி க.தமிழ்ச்செல்வி, தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவு கலை இலக் கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுப்ரமணியன், ஒரத்தநாடு ஒன்றிய கழக தலைவர் த.ஜெகநாதன், தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர கழக அமைப்பாளர் செ.தமிழ்ச் செல் வன், கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், தி.மு.க. கிளைக் கழக செயலாளர் புதுப்பட்டி கா.சுரேஷ், ப.க. உறுப்பினர் புதுப் பட்டி இரா.அப்பர் மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்துகளைக் கூறினர்.
மாநில சமூகக் காப்பு அணி பயிற்றுநர் தே.பொய்யாமொழி நன்றியுரைக் கூற இனிதே மணவிழா முடிந்தது. தொடக்கத்தில் இன எழுச்சிப் பாடகர் உறந்தை கருங்குயில் கணேசனின் “தரணியெங்கும் தமிழோசை” இன்னிசை சிறப்பாக நடை பெற்றது.
No comments:
Post a Comment