பெரியபாளையம்,மார்ச் 2- 23.2.2023 வியாழக் கிழமை அன்று காலை 8 மணியளவில் பெரியபாளையம் ஏ.டி. அரங்கில் டாக்டர் அம்பேத்கர் நகர், பெரியபாளையம் பகு தியை சேர்ந்த திராவிடர் கழக எல்லாபுரம் ஒன்றிய தலைவர் அய்.அருணகிரி-சுமதி இணையரின் மகன் அ.ஷுமேக்கர் லெவி, மதுரை மாவட்டம்,நாகனாகுளம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி யன்- வெண்ணிலா இணையரின் மகள் வெ.ப. தர்சினி இவர்களது ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணத்தை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்.
கழக மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் சே.மெ.மதிவதனி, மற்றும் அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம் ,கே.செல்வ ராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர், கோ.நீலன் (மாநில பொருளா ளர், வி.சி.க) ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். மிகவும் எழுச்சியுடன் நடை பெற்ற இந்த திருமணம் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்து மடலுடன் தொடங் கியது.
வரவேற்புரை - அய். அருணகிரி (எல்லா புரம் ஒன்றிய தலைவர்) முன்னிலை - புழல் த.ஆனந்தன் கும்மிடிப்பூண்டி (மா.த.) பாஸ்கர் கும்மிடிப்பூண்டி மா.செ நன்றியுரை- அய்.ராஜா, எல் லாபுரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தி.மு.க, அ.ஆகாஷ், இளைஞரணி, பெரிய பாளையம், அ.கலைவேந் தன், இளைஞரணி
மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக 22.2.2023 மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் செந்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றார்.
மேலும் கும்மிடிப்பூண்டி மாவட்ட, மீஞ்சூர்,எல்லாபுரம்,புழல், சோழவரம் ஒன்றிய, மற்றும் பொன்னேரி நகர திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
No comments:
Post a Comment