நீரிழிவு நோய் தடுப்பு தொடர்பான கூட்டு ஆராய்ச்சி திட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

நீரிழிவு நோய் தடுப்பு தொடர்பான கூட்டு ஆராய்ச்சி திட்டம்!

சென்னை, மார்ச் 3-  டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மய்யத்தின் ஒரு அங்கமான மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர், நீரிழிவு நோய் ஆராய்ச்சி தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நேற்று (2.3.2023) வெற்றிகரமாக தனது பத்தாவது ஆண்டை சிறப்பாக கொண்டாடியது. இந்த கூட்டணி ஆராய்ச்சி கடந்த 2013ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு தொடர்பான ஆராய்ச்சியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.

இது குறித்து டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மய்யம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் தலைமை நீரிழிவு நோய் தடுப்பு நிபுண ருமான டாக்டர் வி. மோகன் கூறுகையில்:-

டீக்கின் பல்கலைக்கழகத்துடனான மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் பத்தாண்டு காலமாக இணைந்ததை  குறித்து தற்போது நினைவுகூர்வது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள மாணவர்கள் இந்தியாவிலேயே ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் மதிப்புமிக்க பன்னாட்டு பல்கலைக்கழகத்தில் தங்கள் பிஎச்டி படிப்பைத் தொடரவும்  ஒரு சிறந்த தளமாக விளங்கி வருகிறது என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment