காதல் திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயமாம் குஜராத் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களின் விசித்திர உளறல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

காதல் திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயமாம் குஜராத் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களின் விசித்திர உளறல்

அகமதாபாத், மார்ச் 18- காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண் டும் என்று குஜராத் சட் டப்பேரவையில் உறுப்பி னர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குஜராத் சட்டப் பேரவை கூட்டம் 16.3.2023 அன்று  நடைபெற்றது. அப்போது ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பதேசிங் சவுகான் பேசியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காதல் திருமணங்கள் முக் கிய காரணமாக அமைந் துள்ளது.

பெரும்பாலான காதல் திருமணங்கள் வெளி மாவட்டங்களில் நடைபெறுகின்றன. இந்த காதல் திருமணங் களால் பெண்கள் அதி கம் பாதிக்கப்படுகின்ற னர். காதல் திருமணம் செய்த பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இதை தடுக்க காதல் திருமணத்துக்கு பெற் றோர் சம்மதத்தை கட் டாயமாக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டத் தில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த நடை முறையை அமல்படுத்தி னால் பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் 50 சத வீதம் வரை குறையும். இவ்வாறு பாஜக சட்ட மன்ற உறுப்பினர் பதே சிங் சவுகான் பேசினார். இதே விவகாரம் தொடர் பாக காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ஜெனி தாக்கோர் பேசியதாவது: 

நாங்கள் காதல் திருமணத்துக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் குற்றப் பின்னணி உடைய நபர்கள், இளம் பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து காதல் திரு மணம் செய்கின்றனர். இதனால் பெண்கள் அதி கம் பாதிக்கப்படுகின்ற னர்.

இதை தடுக்க காதல் திருமணம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அதா வது காதல் திருமணங்கள் சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளில் மட்டுமே நடைபெற வேண்டும். பெற்றோரின் சம்மதமும் அவசியம். இந்த நடை முறையில் காதல் திருமணங்கள் நடைபெற்றால் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும். காவல்துறையினரின் பணிச்சுமை குறையும். இதர வழக்குகளில் காவல் துறையினர் தங்கள் கவனத்தை செலுத்த முடியும். இவ்வாறு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெனி தாக்கோர் பேசி னார்.

No comments:

Post a Comment