புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதா? பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 6, 2023

புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதா? பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

புதுடில்லி, மார்ச்6- எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒன்றிய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, தெலங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர் ராவ், டில்லி முதல மைச்சர் அரவிந்த் கேஜரிவால் உள்பட எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 9 தலைவர்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சிவசேனை (பால் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகி யோரும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட் டுள்ளனர்.

கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: 

ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தும்போக்கு ஜனநாயகத்திலிருந்து எதேச்சதிகாரத்துக்கு நாம் மாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்த்து கிறது. சிபிஅய், அமலாக்கத் துறை போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகளையும் ஆளு நர் அலுவலகங்களையும் தேர்தல் மோதலுக்கு வெளியே பகைகளைத் தீர்த்துக் கொள்ளும் அமைப்புகளாக பயன்படுத்துவது கண்டனத் துக்குரியது. இச்செயல் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

டில்லி மதுபானக் கொள்கையில் ஊழல் எனக் கூறி சிபிஅய்யால் டில்லி மேனாள் துணை முதலமைச்சர் மனீஷ்  சிசோடியா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீதான குற்றச் சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

டில்லி பள்ளிக் கல்வியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் உலக அளவில் அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தது. அவரது கைது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உதா ரணமாக உலகம் முழுவதும் குறிக்கப்படு வதோடு, பாஜக ஆட்சியில் இந்திய ஜனநாய கத்தின் விழுமியங்களுக்கு ஏற்பட்டுள்ள அச் சுறுத்தல் என்ற உலக நாடுகளின் சந்தேகங்களை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணைந்த பிற கட்சித் தலை வர்கள் மீதான புலனாய்வு அமைப்புகளின் விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, திரிணாமூல் காங்கிரஸ் மேனாள் தலைவர்கள் சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோர் முக்கிய உதாரணங்கள்.

அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை, எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது, வழக்குப் பதிவு போன்றவை 2014ஆம் ஆண்டுமுதல் அதிகரித்துள்ளன. லாலுபிரசாத் யாதவ் (ராஷ்ட் ரீய ஜனதா தளம்), சஞ்சய் ரெஜத் (சிவசேனா), ஆசம் கான் (சமாஜவாதி), நவாப் மாலிக், அனில் தேஷ்முக் (என்சிபி), அபிஷேக்  (டிஎம்சி) போன்றோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் ஒன்றிய அரசின் கூடுதல் பிரிவுகளாக புலனாய்வு அமைப்புகள் செயல் படுகின்றனவா என அடிக்கடி அவை சந்தே கத்தைக் கிளப்புகின்றன. இதன்மூலம் நமது புலனாய்வு அமைப்புகள் அவர்களின் வேலை களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பது தெளிவாகிறது எனக் கடிதத்தில் குறிப் பிட்டுள்ளனர்.

"ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் (அதானி) முதலீடு செய்ததன் காரணமாக எல்அய்சியும், எஸ்பிஅய்யும் தங்கள் பங்குகளின் சந்தை மூலதனத்தில் இருந்து ரூ. 78,000 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளதாக ஒரு பன்னாட்டு நிதி ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட் டுள்ளது. 

தமிழ்நாடு, மகாராட்டிரம், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுநர் களும், டில்லி துணைநிலை ஆளுநரும் அரசியல் சாசன விதிகளை மீறி தலைவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் ஆட்சி நிர்வாகத்திலும் அவர்கள் அடிக்கடி தலையிடு கிறார்கள்' என்றும் அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment