30.3.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 கிரிமினல் வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததால், லட்சத் தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் மீதான தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது.
அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல் வாதிகள் நிறுத்தும் தருணத்தில், வெறுப்புப் பேச்சுகள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அரசு வலிமையற்று இருப்பதாகவும், தன்னுடைய அதிகாரங்களை இழந்து தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு திராணியற்று இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் காட்டமான கருத்துகளை கூறியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 'தஹி' என தயிர் பாக்கெட்டில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் அறிவுறுத்தலுக்கு, தயிரில் கூட ஹிந்தி திணிக்கப்படுவதைக் கண்டித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்குக் காரண மானவர்கள் நாட்டின் தென்பகுதிகளில் இருந்து விரட்டி யடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 மார்ச் 18 அன்று, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வுபெற்ற சில நீதிபதிகள் "இந்தியா-விரோத கும்பலின்" ஒரு பகுதியாக இருப்ப தாகவும், எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகிக்க நீதித் துறையை கட்டாயப்படுத்துவதாகவும் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கருத்தினை திரும்பப் பெறுமாறு 300க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
- குடந்தை கருணா
No comments:
Post a Comment