சென்னை மார்ச் 17 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துநல்வழிப்படுத்தி, நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடை யச் செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படி காவல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தர விட்டார். இதையடுத்து கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பல்வேறு திருநங்கை அமைப் புகளான தோழி, சினேகிதி, சகோதரன், நிறங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளைக் காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து அவர்களுடன் கலந்தாலோ சித்தார்.
அப்போது, சென்னை பெருநகரில் வசிக்கும் திருநங்கைகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல், நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடை யவும், சமூகத்தில்சிறந்த தகுதியுடன் திகழவும், திரு நங்கைகளுக்கானவாழ்வாதாரம், மாற்றுத் தொழிலுக் கான வேலைவாய்ப்புகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கபட்டன. அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வரும் திருநங்கைகளுக்கு அரசுத் துறைகளி லும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் திருநங்கைகள் கல்வியிலும், அனைத்து துறையிலும் சிறந்து விளங்க காவல் துறை யினரும், சமூக ஆர்வலர்களும், திருநங்கைகளின் பிரதிநிதிகளும் இணைந்து செயல்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் வனிதா, கூடுதல் துணை ஆணையர் அண்ணாதுரை உட்படப் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment