சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு

மதுரை, மார்ச் 21- தூத்துக்குடி யில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநாட்டுக்கு அனுமதிகோரி தாக்க லான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 

தூத்துக்குடியில் இந்து மக்கள்கட்சி சார் பில் ஏப். 1, 2-ஆம் தேதி களில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மாநாட்டில் முதல் நாள் கருத்தரங்கம், 2-ஆவது நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் ஆதீனங் கள், சன்னியாசிகள், ஆன் மிக பெரியவர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட் டுக்கு அனுமதி வழங்க காவல்துறையினரிடம் மனு அளித்தும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, 2 நாள் மாநாட் டுக்கு அனுமதி வழங்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது.

காவல்துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வருகி றார். அதற்காக ஆட்சியரி டமும் மனு அளித்துள்ளார். இதனால் அர்ஜுன் சம்பத் மீது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் போராட்டங் கள் மற்றும் மாநாடு, பேர ணிக்கு அனுமதி வழங்கி னால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஆர்எஸ்எஸ் பேரணிக் கும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. ஸ்டெர் லைட் ஆதரவு, எதிர்ப்புப் பேரணிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதன் அடிப்படையில் மனுதாரரின் மனு நிரா கரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனை பதிவு செய்து கொண்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment