என் மீதான வழக்குகள் எல்லாம் முடிக்கப்பட்டுவிட்டது என்று அறிக்கை விட்ட பா.ஜ.க. ரவுடி
பெங்களூரு, மார்ச் 18 கருநாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக முதல் எதிர்க் கட்சிகள் வரை வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பெங்களூரு - மைசூரு இடையில் அதிவிரைவு 10 வழிச் சாலையை திறந்து வைக்க கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி மாண்டியாவிற்கு சென்றார்.
அப்போது மோடியை வரவேற்க காத்திருந்த நபர்களில் ஒருவராக நின்றிருந்தவர் மல்லி கார்ஜுன் எனப்படும் ஃபைட்டர் ரவி. இவர் கருநாடகா மாநில காவல்துறையினரின் பயங்கர சமூகவிரோதிகள் பட்டியலில் முதலாவதாக உள்ளவர். ரவி மீது கொலை, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் மற்றும் பெண்களைக் கடத்துதல் தொடர்பான பல வழக்குகள் இருப்பதாக சொல்லப் படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு நபர் பிரதமர் மோடியை வரவேற்பதா? என்ற கேள்விகள் ஒருபுறம் எழுந்தன. மறுபுறம் என்றாலே ரவுடிகளுக்கு இடமளிக்கும் கட்சி பாஜக என்பது இதன் மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலும் சமூக விரோதிகளை சேர்த்துக் கொண்டு கட்சியை வளர்ப்பதில் பாஜக முதலிடத்தில் உள்ளது தெரியவருகிறது ”உலகில் பாஜகவை போல் ஒரு மோசமான கட்சியை பார்க்க முடியாது. ஒரு ரவுடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிடுகிறார்.
பா.ஜ.க.வில் இணைந்த ரவி
இந்த ஆண்டின் துவக்கத்தில் ரவி பாஜகவில் இணைந்தார். இவர் நாகமங்களா தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ பிரதமரை வரவேற்று அவரைச் சந்திக்கும் வாய்ப்பை பாஜக அளித்தது மிகவும் பெருமைப்பட வைக்கிறது.என் மீதான அனைத்து வழக்குகளும் ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டு விட்டன. இருப் பினும் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சிப்பதாக’ என்று கூறியிருந்தார். மேலும் தன் மீதான வழக்குகள் அனைத்துமே உண்மையானவை அல்ல என்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இது தொடர்பாக கருநாடக பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த ரவி யாரென்று பிரதமர் மோடிக்கு தெரியாது. இந்த சந்திப்பின் போது யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதை காவல்துறை உயரதிகாரிகள் தான் சரி பார்த் திருக்க வேண்டும். ஆனால் இது சரிவர நடக்கவில்லை. எனவே இதற்கு பிரதமர் மோடி பொறுப்பாக மாட்டார்என்று கருநாடக அமைச்சர் சோபா தெரிவித் துள்ளார். மேலும் பேசுகையில், சிறிய கவனக் குறைவால் பிரதமரை ரவி சந்திக்கும் நிலை ஏற்பட்டது என்று கருநாடக பா.ஜ.க. விளக்கம் அளித்துள்ளது
No comments:
Post a Comment