வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்தை முறியடிக்கவேண்டும்!
அதற்கான ஆற்றல், துணிவு தமிழ்நாடு முதலமைச்சருக்கே உண்டு அந்தக் கடமையை அவர் ஆற்ற முன்வர வேண்டும்
சென்னை, மார்ச் 2- வேற்றுமையை மறந்து ஒற்றுமையாயிருந்து, நாட்டைச் சூழ்ந்துள்ள ஜனநாயகத்துக்குஎதிரான போக்கை முறியடிக்க வேண்டும். அத் தகைய ஒற்றுமையை உருவாக்கும் ஆற்ற லும், துணிவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உண்டு; அந்தக் கடமையை ஆற்றிட அவர் முன் வர வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு -காஷ்மீர் மாநில மேனாள் முதல் அமைச்சருமான ஃபருக் அப்துல்லா கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களின் பிறந்த நாள் விழாவில் (1.3.2023) ஜம்மு - காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் கிறேன். மகிழ்ச்சியான இந்த நாள் மீண்டும் வருவதாகட்டும். நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் நாட்டிற்கு சேவையாற்றுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியா வுக்கும் சேவையாற்ற எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
இந்த மேடையில் வீற்றிருக்கும் மற்ற தலைவர்களான எனது அன்பு நண்பர் அகிலேஷ், அகில இந்திய காங்கிரஸ் கட் சியின் தலைவர் கார்கே, நண்பர் ஸ்டாலின், பொதுச் செயலாளர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் கூடியுள்ள பெரியோர்களுக்கும், தாய்மார் களுக்கும் எனது வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்து முடிக்கப்பட்ட பணிகளைவிட இன்னும் செய்யப்பட வேண்டியது நிறைய உள்ளது. இந்தியா இப்போது ஒரு சிக்கலான நிலையில் இருந்து வருகிறது. ஜனநாயகம் என்பது பயமுறுத்தலுக்கு உள்ளாகி இருக் கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவ்வகையில் காஷ்மீருக்கும், தமிழ் நாட்டுக்கும் அந்த நிலை பொதுவானது என்ற வகையில் நாம் விழித்தெழ வேண்டும். காஷ்மீர் சிறீநகரில் இன்றைய வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ். அதேசமயம் சென்னையில் 32 டிகிரி செல்சியஸ், உங்கள் உணவு முறைக்கும் - எங்கள் உணவு முறைக்கும் வித்தியாசம் உண்டு. உங்களுடைய மொழியை நான் புரிந்து கொள்ள முடியாது. அதேபோல எனது மொழியை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. பிறகு நமக்குள் என்ன பொதுவான ஒற்றுமை? ஒற்றுமையுடன் வாழ்ந்து ஒன்றுபட்ட வலிமையான இந்தியாவை உரு வாக்கும் விருப்பமே நமக்குள் பொதுவாக இருக்கிறது.
மாபெரும் பணிகள் தமிழ்நாட்டில் செய் யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் அவர் (மு.க.ஸ்டாலின்) சிறப்பாக செயல்பட் டுள்ளார். ஒருமாபெரும் தந்தையாக இருந் தவரின் பெருமைமிகு தனயனாக அவர் விளங்குகிறார். அவரது தந்தையை நான் நன்றாக அறிவேன். எனது தந்தை பேரறிஞர் அண்ணாவை அறிவார். முத்தமிழறிஞர் கலைஞரையும் அறிவார்.
தமிழ்நாட்டின் நல திட்டங்கள்
இங்கு செய்யப்பட்ட நலத் திட்டங் களைப்போல தேசிய அளவிலும் நிறைய செய்யப்பட வேண்டும். இந்த மேடையில் அவருக்கு எனதுவேண்டுகோள், வலியுறுத் தல் என்ன வென்றால், நாம் இந்தியா குறித்து சிந்தித்தாக வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்கள் குறித்தும் சிந்தித் தாக வேண்டும். எவ்வாறு வெவ்வேறு மதங்களும் இந்தியாவில் இருந்து சமநிலை பேணப்படுகிறதோ, நாம் வேற்று நாட்டி லிருந்து இங்கு வந்துவிடவில்லை. முஸ்லி மாக இருந்தாலும், ஹிந்துவாக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும் நாம் யாராக இருந்தாலும் இந்தியா என்றழைக்கப்படும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களேயாவோம்.
அதனால்தான் அவரிடம் மு.க. ஸ்டாலி னிடம் நான் கோரிக்கையாக வலியுறுத்தலாக, முன் வைக்கிறேன். அதை வேண்டுகோளாக கேட்கவில்லை. அதாவது எனது வலி யுறுத்தல் என்னவென்றால் தற்போது நமது தேவை ஒன்றுபட்டு செயல்படவேண்டும். அது இங்குள்ள தலைவர்களானாலும் சரி, இங்கு இல்லாதவர்களானாலும் சரி, எழுந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும். அனைவரும் மதிப்புடனும், மரியாதை யுடனும் வாழத் தகுதியான ஒரு தேசத்தை நாம் கட்டமைத்திட வேண்டும். அமைதி யுடன் வாழ்ந்திட வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தானே அமைதி ஏற்படும்? மக்கள் பசியால் வாடிய நிலையில், வேலையற்ற நிலையில், விலைவாசி விண்ணை முட்டும் நிலையில் ஒரு தேசம் எப்படி வலிமையானதாக இருக்க முடியும்?
இந்தியாவை வலிமையாக ஆக்குப வர்கள் மக்கள் தானே தவிர, ராணுவமோ, விமானப் படையோ, கப்பல்படையோ அல்ல. இந்திய மக்கள்தான் அதை வலிமை படைத்ததாக மாற்ற முடியும். அதனால் நாம் யாவரும் ஒன்றிணைந்து செயல்புரிய வேண்டும். ஒருங்கிணைந்த புரிதலுடன் பணியாற்ற வேண்டும்.
உங்களுக்கு நான் உறுதி கூறுவது என்னவென்றால் உங்களுக்கான அந்த நாளை வரவேற்க தயாராகுங்கள். நம்பிக் கையை தளர விடவேண்டாம். நம்பிக்கையில்லாதவர்கள்தான் இறந்தவர்களாக கருதப்படுவார்கள். நெஞ்சில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த நாட் டையே மாற்றிக் காட்டுவார்கள். அவர்கள் வெற்றியாளர் களாக இருப்பார்கள். ஏனென்றால் எதையும் சாதிக்கும் மன உறுதி அவர்களிடம் இருக் கும். ஆகவே, அந்த வகையில் ஸ்டாலின் அவர்கள் தேச அளவிலான தளத்தில் செயல்பட்டு. இந்த தேசத்தை கட்டமைக்க முன்வர வேண்டுகிறேன். இந்த மாநிலத்தை தமிழ்நாட்டை சிறப்புற கட்டமைத்த உங் களைப் போன்ற ஒன்றுபட்டு செயல்படும் துணிவுமிக்கவர்கள்தான் இந்த தேசத்துக்கு தேவை.
நான் இன்னொன்றையும் கூற விழை கிறேன். அதாவது ஸ்டாலின் அவர்கள் இந்த நாட்டின் பிரதமராக வரக் கூடிய தகுதி படைத்தவர். இதை நாம் மறந்து விடக்கூடாது. முதலில் தேர்தலில் நாம் வெற்றி அடைய வேண்டும். பின்னர் யார் பிரதமர் என்பதை தேர்வு செய்வோம்.
இன்றைய நிலையில் பிரதமர் என்பது முக்கியமானதல்ல. தேசமே நமக்கு முக்கிய மானது. இந்த நாட்டை காக்க வேண்டு மானால் ஒவ்வொருவரையும் காப்பாற்றியாக வேண்டும். கன்னியாகுமரியில் நீங்கள் தொடங்கி வைத்த பாதயாத்திரை நம்பிக் கையை, இளைஞர்கள் மத்தியில் நம்பிக் கையை அளித்திருப்பதை கண்டேன். அந்த நம்பிக்கை கொண்ட கண்களால் என்னையே நான் கண்டேன். இந்த தேசம் நம்பிக்கையுடன் முன்னேறி வரும் காலம் வந்துள்ளது. நாம் அனைவரும் ஒருவருக் கொருவர் மீதான மரியாதை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் இணைந்து செயல்பட வேண்டும். நம்மி டையே உள்ள வேற்றுமைஉணர்வுகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு. வேற்றுமைகளை கடந்த ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.
எனது தந்தையும், உங்கள் தந்தை கலைஞரும் விரும்பினார்கள். அவர்கள் யாவருமே நாம் ஒற்றுமையாக, அமைதியாக, மரியாதையுடன் வாழ வேண்டும் என்ப தையே பேரவாவாக மனதில் கொண்டி ருந்தார்கள்.
உங்கள் அனைவருக்கும் எங்கள் காஷ்மீர் மாநில மக்கள் சார்பாக இனிய வாழ்த்துக்களை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டோம். பொதுவாக யூனியன் பிரதேசங்கள் மாநிலமாக ஆக்கப்படும் நிலையில் இந்த நிலை மாற்றத்தை நான் முன்னதாக கேள்விப்பட்டதில்லை. அந்த வகையில் நாங்கள் மீண்டும் மாநிலமாக ஆக்கப்பட்டு எங்களுக்கான மதிப்பை பெற நீங்கள் அனைவரும் எங்கள் பின் நின்று ஆதர வளிப்பீர்கள் என நம்புகிறேன்.
இனிய வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன், ஸ்டாலின் அவர்கள் கரங்களை வலுப்படுத்த குழந்தைகள் முதல் முதியோர் வரை, அனைத்து தாய்மார்களும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். அவ் வகையில் நாம் இந்தியர் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படவேண்டும்.
- இவ்வாறு பரூக் அப்துல்லா உரை யாற்றினார்.
No comments:
Post a Comment