இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 6, 2023

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

புதுடில்லி, மார்ச் 6- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில் சென்று கொண்டி ருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஅய்) மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பேட் டியில் அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் தனியார் முதலீடு குறைவு; உயர்த்தப்படும் வட்டி விகிதங்கள்; பன்னாட்டு பொருளா தார சுணக்கம் உள்ளிட்டவை காரணமாக, 1950 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் இருந்த மிகவும் குறைவான (4 சதவீதத்துக்கு கீழ்) பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படும் அபாயம் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொரு ளாதார வளர்ச்சி விகிதம் 4.4 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. கடந்த சில காலாண்டுகளாக பொருளாதாரம் தொடர்பான புள்ளி விவரங்கள் சரிவை மட்டுமே காட்டுகின்றன.

தனியார் துறையினர் புதிய முதலீட்டில் ஆர்வம் காட்ட வில்லை. இதற்கு மத்தியில் ஆர்பி அய்-யும் தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் உலகப் பொருளாதாரம் மந்த நிலையை எட்டும் என்று கருதப்படுகிறது. இதற்கு நடுவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதை யில் மீட்சி என்பது இயலாத காரியம் என்பதே எனது கருத்து.

2023-_2024 நிதியாண்டில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எவ்வாறு இருக்கும் என் பதே இப்போதைய மிகப்பெரிய கேள்வி. அது 5 சதவீதத்தை எட் டினாலே மிகவும் நல் வாய்ப்பான நிகழ்வாக இருக்கும். ஏனெனில், காலாண்டு புள்ளி விவரங்கள் திருப்திகரமாக இல்லை.

உள்கட்டமைப்புத் துறை முதலீடுகளில் கவனம் செலுத்தும் அரசு, உற்பத்தித் துறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சேவைகள் துறையில் அரசின் முயற்சிகள் குறைவாகவே உள்ளன.

வேலைவாய்ப்புகளை உரு வாக்க உற்பத்தி சார்ந்த ஊக்கு விப்புத் திட்டத்தில் ஒன்றிய அரசு அதிக பணத்தை முதலீடு செய்து வருகிறது. ஆனால், ஒரு வேலை வாய்ப்பு உருவாக்க எவ்வளவு நிதி முதலீடு தேவைப்படுகிறது என்பது முக்கியம். முதலீட்டுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் உருவாவது இத்திட்டத்தில் குறைவாகவே உள்ளது. எனவே, இது எதிர் பார்த்த பலனைத் தராது.

இந்தியாவில் இருந்து கைப்பேசி ஏற்றுமதி அதிகரிப்பதை இத்திட் டத்தின் வெற்றிக்கு உதா ரணமாக அரசு செய்தித் தொடர் பாளர்கள் கூறலாம். ஆனால், ஒவ்வொரு கைப் பேசிக்கும் இந் தியா வெவ்வேறு வழிகளில் தயாரிப்பு நிறுவனங் களுக்கு மானியம் அளிக்கிறது என் பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உலகில் வளர்ந்த பொருளாதார நாடுகள் அனைத்தும் இப்போது சேவைத் துறை சார்ந்ததாக உள்ளன. இதில், போக்குவரத்து, சுற்றுலா, சில்லறை வர்த்தகம், தங்கும் விடுதிகள், கட்டுமானம் ஆகிய துறைகளில் இடைநிலைத் திறன் உள்ளவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அதானி-ஹிண்டன்பர்க் போன்ற விவகாரங்களால் அரசுக் கும், தொழில் துறையினருக்கும் உள்ள மறைமுக தொடர்புகள் முடிவுக்கு வரக் கூட உதவக் கூடும். ஆனால், இந்த விடயத்தில் வெளிநாட்டில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டதான குற்றச்சாட் டில் ‘செபி’ விசாரணை நடத்தாதது வியப்பை அளிக்கிறது என்றார்.


No comments:

Post a Comment