சென்னை, மார்ச் 9- மூளையில் ரத்தம் உறைந்து, கை, கால்கள் மரத்துப்போன நபர் 3 மணி நேரத்துக்குள் ஓமந்தூரார் அரசு பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பக்கவாதம் ஏற் படாமல் காப்பாற்றினர்.
சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (36). சில நாட்களுக்கு முன்பு அவரது கை, கால்கள் திடீரென செயலிழந்து மரத்துப்போன உணர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 3 மணி நேரத்துக்குள் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நரம்பியல் துறை தலைவர் பூபதி, நுண் துளை நரம்பியல் கதிரி யக்க நிபுணர் பெரிய கருப்பன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர், மூளையின் ரத்த நாளத் தில் உறைந்து போயிருந்த ரத்தத்தை நுண்துளை மூலம் அகற்றி, பக்கவாதம் ஏற்படாமல் அவரை காப்பாற்றினர்.
இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 7.3.2023 அன்று மருத்துவமனைக்கு வந்து, பிரதாப்பை சந் தித்து நலம் விசாரித்தார். உரியசிகிச்சை அளித்து அவரை காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை பாராட்டினார். தனியார் மருத்துவமனையில் ரூ.6 லட்சம்முதல் 8 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை அரசு மருத்து வமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
நரம்பியல் துறை தலைவர் பூபதி கூறிய போது, ‘‘50 சதவீத பக்க வாதம் தூக்கத்திலேயே வருகிறது. கை, கால் வலி, திடீரென செயல்படாமல் போதல், முகம் ஒரு பக்க மாக இழுத்தல், உடல் ஒரு பக்கம் மரத்துப் போதல், பேசமுடியாமல் போதல், மயக்கம், கடும் தலைவலி, பார்வையில் திடீர் பிரச்சினை ஆகி யவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள்.
அனைவரும் துரித உணவுகள் (ஃபாஸ்ட் ஃபுட்), மது உள்ளிட்ட போதை பழக்கங்கள் ஆகியவற்றை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இரவு 7 மணிக்கு இரவு உணவை முடித்து 9 மணிக்குள் தூங்கி காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்’’ என்றார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் இரா.சாந்தி மலர், மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங் கிணைப்பு அலுவலர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment