வல்லம். மார்ச் 19- இரண்டு நாள்கள் பன்னாட்டு கருத்தரங்கம் "கணிதம் பயன்பாட்டு பகுப்பாய்வு மற்றும் கணக்கீடு" என்ற தலைப்பில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கணிதத் துறை நடத்தியது.
இதில் முனைவர் ச.புவனேஸ்வரி (தலைவர், கணிதத்துறை) வரவேற்புரை வழங்கினார். பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா கணிதத்தின் பயன்பாடு அறிவியல் மற்றும் தொழில்நுட் பத்தில் எவ்வாறு செயல்படுகிறது என எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் எஸ்.வேலுசாமி துவக்கவுரையில் கணிதத்தின் கட்டமைப்புகளை விளக்கமாக கூறினார். பேராசிரியர் வி.ரவிச்சந்திரன் (கணிதத்துறை தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி) முதன்மை உரையில் ஆய் வகக்கட்டுரை எழுதுவது பற்றி தெளிவாக கூறினார்.
முதலாம் அமர்வில் பேராசிரி யர் நொய்ங்கடாம் (தேசிய தொழில் நுட்ப ஆராயச்சி பல்கலைக்கழகம், ரஷ்யா) செஸ்டாக் முறைகள் மற்றும் அவசியத்தைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.
இரண்டாம் பிரிவில் முனைவர் இஸ்மாயில் நாசி கங்கில், (பேராசிரியர், கணிதத்துறை பர்சா டாலுடாக் பல்கலைக்கழகம், துருக்கி) ரிசன்ட் அட்வான்டேஜஸ் ஆன் தி நம்பர் ஆப் கிராப் ரியலை சேஷன்ஸ் அன்ட் டிகிரி சிக்வு வன்ஸ்" பற்றி விரிவுரையாற்றினார்.
மூன்றாம் பிரிவில் பேராசிரியர் வேதியப்பன் கோவிந்தன் (இணை பேராசிரியர், கணிதத்துறை டிம். எம்.அய். செயின்ட் ஜான் பாப் டிஸ்ட் பல்கலைக்கழகம், மத்திய ஆப்பிரிக்கா) செகு டிரான்ஸ்பார்ம் மற்றும் அதன் பண்புகள் பற்றி விளக்கினார்.
இரண்டாம் நாள் (17.03.2023) அன்று முதல் பிரிவில் பேராசிரியர் சாரதா சதாசிவம் (இணை பேராசிரி யர் செயின்ஸ் பல்கலைக்கழக மலேசியா) நியூரல் நெட்டுவொர்க் பற்றி கூறினார்.
2ஆம் பிரிவில் பேராசிரியர் பி.பாலகுமார் (இயக்குநர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கன்சல்டிங் எடிட்டர் பார்மகாலஜிக்கல் ரிசர்ஜ் எல்ஸ்வியர் (இம்பேக்ட் பேக்டர் : 10.334)) ஆய்வுக்கட்டு ரைகள் வெளியிடுவதில் உள்ள சிறப்பான நுணுக்கங்ககளை பற்றி கூறினார். ஏறக்குறைய 109 ஆய் வுக்கட்டுரைகளை இளநிலை, முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் எடுத்துரைத்தனர்.
இரண்டாம் நாள் பன்னாட்டு கருத்தரங்கின் முடிவில் பேராசிரி யர் அ.சசிகலா (இணை பேராசிரி யர், கணிதத்துறை) வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் பி.விஜயலெட்சுமி (முதன்மையர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை புலம்) வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் பி.பாலகுமார் மற்றும் பேராசிரியர் அ.ஜார்ஜ் (முதன் மையர், கல்விபுலம்), பேராசிரியர் எ.மோகன் (உதவி பேராசிரியர், உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சி), பேராசிரியர் எ.வெங்க டேஷ் (உதவி பேராசிரியர், ஏ.வி. எம். சிறீ புஷ்பம் கல்லூரி பூண்டி) கருத்தரங்கில் பங்குபெற்ற மாண வர்களுக்கு சான்றிதழ்களை வழங் கினர்.
பேராசிரியர் பி.சிறீதேவி (உத விப் பேராசிரியர், கணிதத்துறை) இரண்டு நாள் கருத்தரங்கின் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
இறுதியாக பேராசிரியர் ஆர்.பாலகுமார் (உதவி பேராசிரி யர், கணிதத்துறை) நன்றியுரை வழங்க கருத்தரங்கு இனிதே முடி வடைந்தது.
No comments:
Post a Comment