சென்னை, மார்ச் 20-- தமிழ்நாடு, கேரள காங்கிரஸ் சார்பில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைப்பயணம் ஈரோட்டில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது.
மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் 91-ஆவது பிறந்த நாள் விழா சத்யமூர்த்தி பவனில் நேற்று (19.3.2023) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து, மேனாள் அய் ஏஎஸ் அதிகாரி ஆர்.ராஜகோபால், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக் கத்தின் மாவட்ட அவைத் தலைவர் மா.வே.மலையராஜா ஆகியோர் அழகிரி முன்னிலையில், காங்கிர ஸில் இணைந்தனர். பின்னர், அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதா வது: சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் பங்கேற்று, சிறைக்குச் சென்றார். அந்த நிகழ்வின் நூற்றாண்டுவிழா கொண்டாடப் பட் டதையொட்டி, தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் சார்பில், வைக் கம் போராட்டத்தின் நூற்றாண்டு நடைப்பயணத்தை வரும்28ஆ-ம் ஈரோட்டில் நான் தொடங்கி வைக் கிறேன். நடைப்பயணம் வெற் றிய டைய, மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாய கம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றார். அங்கு, ‘‘இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துகள் முடக்கப்பட்டன. ஒலிப்பெருக்கி நிறுத்தப்பட்டது. பேசுவதற்கு அனுமதி வழங்குவதில்லை.
காங்கிரஸ் வளர்த்த ஜனநாய கம், பாஜக ஆட்சியில் நசுக்கப்படு கிறது’’ என்றார். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தேச விரோதம் என்று கூறி, அவரது வீட்டைச் சுற்றி ஒன்றிய அரசு காவல்துறையினரை நிறுத்தியுள் ளது. இவ்வாறு அவர் கண்டனக் கருத்தைக் கூறினார். இந்த நிகழ்ச் சியில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ண மூர்த்தி, ஆ.கோபண்ணா, மாவட் டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment