எந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், சரியான பின்னரும் உடல் சோர்வு, சுவாசப் பிரச்சினைகள் உட்பட பல பக்க விளைவுகள் இருக்கவே செய் யும்.
குறிப்பிட்டு சொல்ல முடியாத பொது வான உடல் பிரச்சினைகளுடன் 30 - 40 சதவீதம் வெளிநோயாளிகள் தினமும் வருகின்றனர்.
'சில நாட்களாகவே விடாமல் தலை வலிக்கிறது, மூச்சு வாங்குகிறது, அயர்ச்சியாக இருக்கிறது, முன்பைப் போல சுறுசுறுப்பாக இருக்க முடிவதில்லை' என்று சொல்கின்றனர். வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அதன் தொடர்ச்சி யான நீண்ட கால பக்க விளைவுகள் மூன்று பிரிவுகளாக இருக்கும்.
முதல் வகையில் அயர்ச்சி, தலைவலி. இரண்டாவது வகையில் சுவாசக் கோளாறுகள், இருமல், மார்புப் பகுதியில் இறுக்கமாக உணர்வது, மூச்சு வாங்குவது. மூன்றாவது வகை பாதிப்பு, மூளை தொடர்பானது, முடிவு எடுப்பதில் குழப்பம், ஞாபக மறதி போன்றவை.
கரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், பதற்றம், மன அழுத்தம், தொண்டை வலி, ருசியில் மாறுபாடு, குரல் வளையில் எரிச்சல், மூச்சுக் குழாயில் எரிச்சல், பட படப்பு, வயிறு தொடர்பான உபாதைகள், தசைகளில் வலி, எலும்புகளில், மூட்டுகளில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உட்பட 59 அறிகுறிகளும், இன்னொரு ஆய்வில், 89 அறிகுறிகளும் இருக்கலாம் என்று உறுதியாகி உள்ளது.
இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து உடல் உபாதைகள் இருந் தால், கரோனா வந்துள்ளதா என்று உறுதி செய்ய ஆன்டிபாடீஸ் பரிசோதனை செய்ய வேண்டும். வைரஸ் தொற்று தவிர வேறு காரணங்களால் இந்த உடல் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதையும் தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும்.
சில சமயங்களில் பாதித்த வைரஸ், குறைந்த வீரியத்துடன் உடலில் இருக் கும்; அதனால் தொடர்ந்து தொற்று பாதிப்பு இருக்கும்; அதனால் தான் இந்த அறிகுறிகள் பல மாதங்கள் இருக்கின்றன.
வைரஸ் பாதிப்பு இருந்த போது, அதற்கு எதிராக எதிர்ப்பணுக்கள் உரு வாக்கும் அழற்சி குறியீடுகள், பாதிப்பு குணமான பின்னரும் சீரற்று செயல் படலாம்.
ரத்தப் பரிசோதனையில் இதை உறுதி செய்ய முடியும். வைரஸ் தொற்றுக்கு முன், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு கோளாறு இல்லாமல் இருந்தவர்களுக்கு, பாதிப்பிற்கு பின் கோளாறுகள் வந்திருக்கின்றன.
அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சையும், பிசியோதெரபி உட்பட சில உடற்பயிற்சிகளும் இதற்கு தேவைப் படலாம்.
No comments:
Post a Comment