சென்னை, மார்ச் 3 சென்னையில் தசை-எலும்பு புற்றுநோய் தொடர்பான 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புற்றுநோய் துறை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் ஆனந்த் ராஜன், வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தசைக்கூட்டு பகுதி புற்றுநோய்க்கு உரிய நவீன சிகிச்சை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் 2014-ஆம் ஆண்டு இந்திய தசை-எலும்பு புற்றுநோயியல் சங்கம் (மிவிஷிளிஷி) தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தின் 9-ஆவது ஆண்டு மாநாடு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் மார்ச் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதிவரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
மேலும், இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், இந்தியா முழுவதும் உள்ள சிறந்த புற்றுநோயியல் நிறுவனங்களை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்தமாநாட்டில், தசை-எலும்பு புற்றுநோய் துறையின் நுணுக்கங்கள் குறித்து விவாதிக் கப்பட இருக்கின்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment