அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று (21.3.2023) வழக்கம் போல் நாடாளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை விட்டு வெளியேறிய காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரத்தில் கூட்டு குழு விசாரணை தேவை என முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்றத்தின் முதல் தளத்தில் நின்றவாறு கையில் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வெளிநடப்பு போராட்டத்தால் நாடாளுமன்றமே பரபரப்பாக காணப்பட்டது.
No comments:
Post a Comment