சென்னை, மார்ச் 23- தமிழ்நாட்டில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருப் பதை கருத்தில் கொண்டு வேளாண் பட்ஜெட்டில் வேளாண் இயந்திரமய மாக்கலுக்கு முக்கியத் துவம் தரப்பட்டுள்ளது என்று வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்தார்.
வேளாண்மை பட் ஜெட் தொடர்பாக வேளாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந் தாண்டுக்கான பட்ஜெட் டில் வேளாண் இயந்திர மயமாக்கலுக்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டிருக் கிறது. தமிழ்நாட்டில் விவசாய வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக் காததால் 72 சதவீதத் துக்கும் மேல் உள்ள சிறு, குறு விவசாயிகள் சிரமப் படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு சிறு, குறு விவசாயிகளின் வேளாண் பணிக்கு சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிரா மத்துக்கு 2 பவர் டில்லர் வீதம் 2,504 கிராமங்க ளுக்கு சுமார் 5 ஆயிரம் பவர் டில்லர்கள் வழங்கப் படவுள்ளன. அதுமட்டு மில்லாமல் டிராக்டர், அறுவடை இயந்திரங்க ளும் வழங்கப்படும். இதற் காக ஒன்றிய, மாநில அரசுகளின் நிதியில் இருந்து ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக விவ சாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், விளைந்த வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கும் முக்கியத் துவம் தரப்படுகிறது. அதற்காக விவசாயிக ளுக்குத் தேவையான கட் டமைப்பு வசதிகள் ஏற் படுத்தித் தரப்படும். குறிப் பாக வேளாண் பொருட் களை இருப்பு வைத்து விற் பதற்காக கூடுதலான கிடங் குகள் கட்டித் தரப் படும்.
மேலும், வேளாண் வணிகர்கள் கொள்முதல் செய்த வேளாண் பொருட் களை குளிர்சாதனக் கிடங்குகளில் வைப்பது, வங்கிகளில் கடன் பெறு வது, தேசிய வேளாண் சந்தை திட்டத்துடன் இணைப்பது போன்ற வற்றுக்கும் முக்கியத்து வம் தரப்பட்டுள்ளது.
நபார்டு வங்கியில் ரூ.500 கோடி கடன் பெற்று தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாண் கருவி களை வாங்கி வாடகைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அங்கக வேளாண் மைக்கு அதிக முக்கியத் துவம் தரப்படுகிறது. இந்த இயற்கை வேளாண் மைக்கு தேவையான கட்ட மைப்பு வசதிகளை ஏற் படுத்தி ஊக்குவிக்கப்படும்.
இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் சோதனை அடிப்படை யில் பணிகள் நடைபெறு கின்றன. இதற்காக சிறப் புத் திட்டம் ஒன்றும் செய ல்படுத்தப்படவுள் ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment