கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை திட்டம் நீக்கப்படுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை திட்டம் நீக்கப்படுமா?

மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி

புதுடில்லி, மார்ச்17- "இதர பிற்பட்டோர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல் படுத்தும்போது தற்போது கடைப்பிடிக்கப் படும் கிரீமிலேயர் நடைமுறையால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.  எனவே அந்த நடைமுறை நீக்கப்படுமா" என்று நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டாக் டர் கனிமொழி என்.வி. என்.சோமு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதி காரமளித்தல் துறையின் இணையமைச்சர் நாராயணசாமி அளித்த பதில் வருமாறு:

இதர பிற்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தற்போது வழங்கப்படும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத் தும்போது, அதே பிரிவினரில் பொரு ளாதார ரீதியாக முன்னேறியதாக கண் டறியப்படும் நபர்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்படுவதில்லை.   இதர பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை; கல்விக்கடன் மற்றும் வெளிநாட்டு படிப்புக்கென பெரும் கடன் தொகைக்கான வட்டியில் சலுகை; இப்பிரிவு மாணவ- மாணவிகளுக்கு தனி தங்கும் விடுதிகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முன்னுரிமை; தொழில் தொடங்கும் நேரத்தில் முதலீட்டுக்கான உதவி; தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடனுதவி என பல சலுகை மற்றும் உதவிகள் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த பலப்பல ஆண்டுகளாக இதர பிற்பட்டோருக்கான இ ஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட வேண்டிய ஒன் றிய அரசுப் பணி இடங்கள் கணிசமாக உயர்ந்திருந்தது. ஒன்றிய பணியாளர் நலன் மற்றும் பயிற் சித்துறையின் மூலமாக அந்த இடங்களின் எண்ணிக்கை சரியாக கணக்கிடப்பட்டு 2016_2021 கால கட்டத்தில் 95,563 பணியிடங்கள் இந்தப் பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. 

-இவ்வாறு அமைச்சர் நாராயணசாமி பதிலளித்தார்.

No comments:

Post a Comment