சென்னை, மார்ச் 5 பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக வதந்தி பரப்பி அவர்களை அச்சுறுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஹிந்தி பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்கள், காவல் துறை யினர் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே 'ஹோலி' கொண்டாட சொந்த ஊர் செல்லும் நிலையில் தொழிலாளர்கள் அச்சத்தில் இருப்ப தால் அவர்கள் சொந்த ஊர்திரும்பத் தொடங்கியிருப்பதாக தகவல் பரப்பப்படுகிறது.
ஆள் பற்றாக்குறையால் தொழில் பாதிக்கப்படும் என்று ஜவுளி, உற் பத்தித் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோர் அரசுக்குக் கவலை தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் எச்சரிக்கை
வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுபோன்ற பொய்யான தக வலை சமூக ஊடகங்களில் பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரிக்கத் தனிப் படை யினர் பீகார் விரைந்திருக்கின்றனர். இந்த நிலையில் பீகார் மாநில தொழி லாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவ தாக அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைமீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment