உத்தரப்பிரதேச பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இவர் பெண் மல்யுத்த வீராங் கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். அதையடுத்து, மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மல்யுத்தக் கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி 18ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்போராட்டத்தை அடுத்து, இந்த விவகாரம் குறித்து உரிய பதிலளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு விளையாட்டு அமைச்சகம் உத்தர விட்டது. இதுகுறித்து மல்யுத்தக் கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், "இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன் சார்ந்தது என்பதால், அமைச்சகம் இதனைத் தீவிரமான ஒன்றாகப் பார்க்கிறது. இந்த விவாகாரம் தொடர்பாக 72 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். தவறினால், தேசிய விளையாட்டுத்துறை விதி 2011இன் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக அமைச்சகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் ஒன்றிய விளை யாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், ரவி தாஹியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய மல்யுத்தக் கூட் டமைப்பை கலைத்தே ஆக வேண்டும் என்று வீரர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்ததால், அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து "மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை அம்பலப்படுத்துவேன்" என்று இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் தெரிவித்தார்.
‘‘நான் பேசத் தொடங்கினால் இங்கு சுனாமியே வரும். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பதவிக்கு வந்துள்ளேன். எந்தக் காரணம் கொண்டும் பதவி விலகப் போவதில்லை’’ என்று திமிராகப் பேசினார்.
அதேபோல் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷாவிற்குக் கடிதம் எழுதினர்.அதைத் தொடர்ந்து மல்யுத்த வீரர்களின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டது. அதன்படி மேரி கோம், டோலா பானர்ஜி, அலகனந்தா அசோக், யோகேஷ் வர் தத், சஹ்தேவ் யாதவ் மற்றும் இரண்டு வழக்குரைஞர்கள் உள்பட 7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக் கப்பட்டது. இந்த நிலையில், விசாரணை அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 23ஆம் தேதி அமைக்கப்பட்ட விசா ரணைக் குழு 4 வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும்
2 வாரங்கள் நீட்டித்து மார்ச் 9ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
"குற்றம் சாட்டப்பட்ட இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் பிஜேபி நாடாளுமன்ற உறுப் பினராகவும், கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவ ராகவும் இருப்பதால் அவர் மீதான விசாரணையைக் காலம் கடத்தி, அவரைத் தப்ப வைக்கவே, குற்றச் சாட்டுகளை வைத்த வீராங்கனைகளை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியாக விசாரணையை தாமதப்படுத்தி வருகின்றனர்" என்று இந்திய மல்யுத்த பெண் வீராங்கனைகள் கூறி யுள்ளனர்.
பிஜேபி தலைமையிலான மோடி அரசு வந்தாலும் வந்தது; அதன் அதிகார வெறி ஆட்டத்திற்கு அளவே இல்லை.
மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் அத்துமீறல் விடயத்தில்கூட பிஜேபியின் அரசியல் புகுந்து விளை யாடுகிறது! குற்றவாளி பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவரைக் காப்பாற்றும் ஒன்றிய அரசின் போக்கு அருவருப்பானதே!
No comments:
Post a Comment