ஆதி திராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

ஆதி திராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு அரசாணை வெளியீடு

சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் பணி புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017, 20 மட்டும் 22 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு 8,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 2017இல் ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தது.


No comments:

Post a Comment