நீட் தேர்வு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 1, 2023

நீட் தேர்வு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி வலியுறுத்தல்

புதுடில்லி, மார்ச். 1- பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் அவருடைய இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து நினைவுப் பரிசாக திருவள்ளுவர் சிலையை வழங்கிய தமிழ் நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி. நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினார். 

டில்லியில் பிரதமர் மோடியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத் தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க் கிழமை சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நடை பெற்ற இந்தச் சந்திப் பின்போது, தமிழ்நாடு சார்ந்த பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப் பட்டதாக உதயநிதி தெரிவித்தார். குறிப்பாக, ‘அடுத்த ‘கேலோ இந்தியா (விளையாடு இந்தியா)’ விளையாட்டை தமிழ் நாட்டில் நடத்த வேண் டும்; ஒன்றிய அரசுத் துறை பணிகளில் தமிழர் களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.

நீட் தேர்வு தொடர் பான தமிழ்நாடு மக்களின் நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தேன். தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து விளக்கி, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்’ என்றார் உதயநிதி.

அமைச்சருடன் சந்திப்பு:

 முன்னதாக, டில்லியில் ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரி ராஜ் சிங்கை அமைச்சர் உதயநிதி சந்தித்தார்.

அப்போது, தமிழ் நாட்டில் செயல் படுத்தப் பட்டு வரும் ஊரக வளர்ச்சித் துறை திட்டங்கள்,  மகளிர் மேம் பாட்டுத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு திட் டங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங் கள் குறித்து ஒன்றிய அமைச்சரிடம் உதயநிதி எடுத்துக் கூறியதோடு, இந்தத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்த னர். 

இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித் துறை முதன்மைச் செயலர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் ச.திவ்யதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment