புதுடெல்லி மார்ச் 19 தமிழ்நாட்டில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர் பாக அரசுக்கும், முதலமைச்சக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழ்நாட்டின் பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க வேண் டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஆண்டு செப்.14ஆ-ம் தேதி நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் தகுதி நிலை வழங்கும், பழங்குடியினர் அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா கடந்த 16.3.2023 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்கள வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை யடுத்து குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும், அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.
No comments:
Post a Comment