வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு

சென்னை மார்ச் 4 வேளாண் மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி நிறுவன கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, ராணிப் பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய வேளாண் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன் னிலை வகித்தார். வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சி.சமயமூர்த்தி விளக்கவுரை ஆற்றினார்.  இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கண்காட்சியில் வேளாண் பொருட்கள் மற்றும் வீரிய ஒட்டு ரக பழரகங்கள், மதிப்பு கூட்டு பொருட்கள், கொய்யா, மலர்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள், டிராக்டர்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. இக்கூட்டத்தில் ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், வேளண்மை- உழவர் நலத்துறை இயக்குநர் ஆ. அண்ணாதுரை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநர் முனைவர்.எஸ்.நடராஜன் , வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் இரா.முரு கேசன், விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை இணை இயக்குநர் கே.ஜெய செல்வின் இன்பராஜ், காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், வரலட்சுமி மதுசூதனன் சி.வி.எம்.பி. எழிலரசன், எஸ்.எஸ்.பாலாஜி, உள்ளாட்சி பிரதிநிதிகள் பேசினர்.


வேளாண் துறை வளர்ச்சிக்கு விரிவாக்கத் திட்டம்

சென்னை, மார்ச் 4 வேளாண் துறை மேம்பாட்டிற்காக விவசாய வாகனங்கள், உபகரணங்களின் செயல்பாட்டை வலுப் படுத்த இந்தியாவின் முதன்மை டிராக்டர் ஏற்றுமதி நிறுவனமாகிய இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் எதிர்காலத்துக்கு தேவையான புத்தாக்கமான தொழில் நுட் பங்களை புகுத்த ரூ.200 கோடி முதலீட்டில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்துகிறது.

அடுத்த தலைமுறை தொழில் நுட்பங் களை அறி முகப்படுத்த இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய அய்ரோப்பாவின் நெதர்லாந்தில் உள்ள சோலிஸ் டிராக்டர்ஸ் மற்றும் அக்ரிகல்சுரல் மெஷினரி, வீல் லோடர் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற ஜெர்மனியின் போலிங் பகுதியில் உள்ள தாலர் ஜி.எம்.பி.எச். அன்கோ, கே.ஜி. அய் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது என அய்.டி.எல். நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment