அறிவியல் வளர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

அறிவியல் வளர்ச்சி

சிந்திக்கும் இயந்திர மனிதன் வருவான் 

செயற்கை நுண்ணறிவு குறித்து புனைக்கதை எழுத்தாளர் ஆர்த்தர் சி.கிளார்க் 59 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய காட்சிப் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் உலகம் முழுவ தும் இப்போது பேசு பொருளாகி உள்ளது. இது மனிதனைப் போலவே சில பணிகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சரி யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஓட்ட லில் உணவு வழங்கும் சேவை செய்வது முதல் மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை செய்வது வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ரோபோக்கள் வந்துவிட்டன. இந்த தொழில்நுட்பம் குறித்து புனைக் கதை எழுத்தாளர் ஆர்த்தர் சி.கிளார்க் 59 ஆண்டுக ளுக்கு முன்பே கணித்துக் கூறி யுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1964ஆம் ஆண்டு செப் டம்பர் 21ஆம் தேதி பிபிசி தொலைக்காட்சியில் வெளியான ஒரு நிகழ்ச்சியில் ஏஅய் குறித்து கிளார்க் பேசியுள்ளார். அதில், “வரும் காலத்தில் மிகவும் புத்தி சாலியாக மனிதனோ, குரங்கு களோ இருக்காது. அது இயந்திர மாகத்தான் இருக்கும். அவை சிந்திக்கவும் தொடங்கும்” என கூறுகிறார். ஒரு நிமிடம் 42 விநாடிகள் ஓடும் இந்த காட்சிப் பதிவை மாசிமோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந் துள்ளார்.

இது சமூக வலை தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த காட்சிப் பதிவை டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கும் பகிர்ந்துள்ளார். இது வரை 10 லட்சத்துக்கும் அதிகமா னோர் பார்த்துள்ளனர். அவர் களில் பலர் ஆர்த்தரின் கணிப்பை பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment