செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

செய்திச் சுருக்கம்

வாக்காளர்

தமிழ்நாட்டில் நேற்று நிலவரப்படி 66.04 சதவீதம் பேர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதாவது 4கோடியே 8 லட்சம் பேர் இணைத்துள்ளனர் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பயிற்சி

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் பணிபுரிய பொறியாளர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு வரும் 31ஆம தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. மேலும் விவரங்களுக்கு  www.boat.srp.com  எனும் இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மின்சாரம்

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை கடந்த 1ஆம் தேதி முதல் 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

கட்டுப்பாடு

முசிறி நகர கூட்டுறவு வங்கியின் நிதிநிலை சீர்குலைவால் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி நிர்வாகத்துக்கு பணம் எடுப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வெப்பம்

ஜனவரி - பிப்ரவரி மாதங்களை நாம் குளிர் காலங்களாக கருதுவோம். இந்த ஆண்டு 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. தற்போது கோடை காலத்தில் கோடை மழை பெய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மய்ய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் தகவல்.

எச்சரிக்கை

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பணியிடம் இல்லாத நிலையில், பரிசோதகர் என்ற பெயரில் அபராதம் வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மாநாடு

சென்னையில் வரும் 23-25ஆம் தேதிகளில் நடைபெறும் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாட்டில் இணைந்து செயலாற்றுவது குறித்து ஆஸ்திரேலியா, பிரான்ஸ் துணை தூதர்களுடன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து உரையாடினார்


No comments:

Post a Comment