ஆண்டிமடம், மார்ச் 5- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக எதிர்வரும் 8ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தை விளக்கி தெரு முனைக்கூட்டம் ஆண்டிமடம் கடைவீதி யில் 3.3.2023 அன்று மாலை 5 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன் தலைமையேற் றார். ஒன்றிய கழக செயலாளர் தியாக முருகன் வரவேற் புரையாற்றினார். மாவட்ட தலைவர் விடு தலை நீலமேகன், மண்டல செயலாளர் சு. மணி வண்ணன், மாவட்ட துணைச்செயலாளர் மா.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பேச்சாளர் யாழ். திலீபன் சமூகநீதிப் பய ணம் குறித்து சிறப்புரை யாற்றினார். மண்டல தலைவர் இரா.கோவிந்தராஜன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
மாவட்ட இளைஞரணித் தலைவர் க.கார்த்திக், அமைப்பாளர் க.செந்தில், ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய அமைப்பாளர் கோ.பாண்டியன், நகரதலைவர் ந.சுந்தரம், நகர செயலாளர் டி.எஸ்.கே. அண்ணாமலை, செந்துறை ஒன்றிய துணைத் தலைவர் சுப்பராயன், இளைஞரணித் தலைவர் ரஜினி காந்த், ஒன்றியத் துணைத் தலைவர் இரா.எ.இராம கிருட்டிணன், ரெட்டிதத் தூர் செல்வரங்கம், இளைஞரணி ப.மூர்த்தி, கா.சமரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment