சென்னை, மார்ச் 4 தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்தி வெளியிட்ட ஏட்டின்மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
''தைனிக் பாஸ்கர்'' என்ற ஹிந்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி வருமாறு:
''தமிழ்நாட்டில் பீகார் (ஹிந்தி) தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள். அந்த மாநிலம் ஹிந்தி பேசுபவர்களுக்குக் கெடு விதித்துள்ளது. மார்ச் 20 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், அனைவரும் கொல்லப்படுவார்கள்'' என்று அந்த நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது.
அபாண்டமான இந்தப் பொய்ச் செய்தி வெளியிட்ட நாளேட்டின்மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment