கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

மதுரை, மார்ச் 18- சாதாரண வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை. ஆனால், கார்பரேட் நிறு வனங்களின் கடனில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள் என்று வங்கிகள் மீது மதுரை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். அப்போது வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகை வங்கிக்கடன்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. கடன் தொகை நிலுவை குறித்து சம்பந்தப்பட்ட வர்களுக்கு வங்கிகள் சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் நட வடிக்கை எடுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பல மனுக்களை தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் விசாரித்தபோது, வங்கிகளுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினர். 

"கடன் வாங்கிவிட்டு முறையாக திருப்பிச்செலுத்தும் வாடிக்கையாளர்கள் மீண்டும் கடன் கேட்டால், வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. ஆனால் பல்வேறு மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன. பல நேரங்களில் இவர்கள் நியாயமாக செயல்படுவதில்லை" என்று நீதிபதிகள் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்தனர். மேலும் "கடன் தொகையை செலுத்த முடியாத நேரத்தில் சாதாரண வாடிக்கையாளர் களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை. ஆனால் கார்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடன் தொகையில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள்" என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் விசார ணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment