அதிகரிக்கிறது கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

அதிகரிக்கிறது கரோனா பாதிப்பு

புதுடில்லி,மார்ச்13- ஒன்றிய சுகாதார அமைச்சகம் சார்பில் நேற்று (12.3.2023) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 24 மணி நேரத்தில் 524 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 11.3.2023 அன்று இந்த எண்ணிக்கை 456-ஆக பதிவாகியிருந்தது.

நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித் துள்ளது. தற்போது 3,618 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா பாதிப்பால், கேரளத்தில் மேலும் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,781-ஆக உள்ளது.

No comments:

Post a Comment