ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று, இன்று (2.3.2023) காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்னணியில் இருந்தார்.
பகல் 2 மணி நிலவரப்படி...
பகல் 2 மணி நிலவரப்படி வாக்குகள் எண்ணிக்கையின்படி ஈ.வெ.கி.ச.இளங்கோவன் - 61,682 வாக்குகளும்,
அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு - 22,556
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் - 3,604
தே.மு.தி.மு.க. வேட்பாளர் - 606 வாக்குகளும் பெற்றனர்.
அ.தி.மு.க. வேட்பாளரைவிட, ஏறத்தாழ 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முன்னணியில் உள்ளார்.
வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பேட்டி
ஈரோட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், இந்த வெற்றியின் பெரும் பங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும் என்று கூறினார்.
No comments:
Post a Comment