சென்னை, மார்ச் 9- தமிழ்நாட் டில் உள்ள அனைத்து மாவட் டங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தலை மையில் நம்பிக்கையளிக்கும் விளக்கக் கூட்டங்களுக்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்ய தனியே ஒரு வலைதளம் https:/labour.tn.gov.in/ism உருவாக்கப்பட்டுள் ளது. இதில் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் காட்சி பதிவுகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது போலியான காட்சி என காவல்துறையும் விளக்கம் அளித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், ‘‘வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில நிகழ்வுகளின் காட்சிப் பதிவுகளையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடை பெற்றதாக வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பி, அச்சத் தையும் பீதியையும் உருவாக்கு வோர் மீதுசட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 4-ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநில காவல் துறை துணைத்தலைவர் தலைமையில் வந்தஜார்க்கண்ட் மாநில அதிகாரிகள், பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலர் தலைமையிலான அதிகாரிகள் தமிழ்நாடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று அவர்களின் கருத்து களை கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப் பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வெளி மாநிலத் தொழிலாளர்களின் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு எடுத்து ரைக்க வேலையளிப்போர் அமைப்புகளுக்கு தொழிலா ளர் துறை அலுவலர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டும், நேரடி விளக்க கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து விளக்கக் கூட் டங்கள் நடத்தி, தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக் கும் வகையில் உறுதியளித்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment