பட்டுக்கோட்டை, மார்ச் 4- பட்டுக் கோட்டை அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்ட ளையின் சார்பில் பட் டுக்கோட்டை லட்சுமி பிரியா திருமண மண்ட பத்தில் மாணவர்களுக் கான +2 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என் கிற வழி காட்டும் சிறப்பு நிகழ்ச்சியும் பெரியார், அம்பேத்கர் காமராஜர், அப்துல் கலாம், ஆகிய தலைவர் களின் பெயரில் சாதனையாளர் களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ் வும் சிறப்புடன் நடை பெற்றது.
பெரியார் விருது பட் டுக்கோட்டை நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி சேகருக்கும், விடு தலை சிறுத்தை கட்சியின் தொகுதி செய லாளர் சக்கரவர்த்திக்கும், தமிழக மக்கள் கழகப் பொதுச் செயலாளர் தங்க.குமரவேலுக்கும் வழங்கப்பட் டது.
மேலும் பல்வேறு துறைகளில் சமூக சேவையாற்றிவரும் சமூக சேவகர்களுக்கும் விருது கள் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.
500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்ற னர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர் வேதவல்லி அவர்க ளும் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்களும் கலந்து கொண்டு மாண வர்களுக்கு சிறப் பான ஆலோசனைகளையும், சாத னையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment