மனித டிஎன்ஏ-வில் டேட்டா ஸ்டோரேஜ் எதிர்காலத்தில் சாத்தியமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

மனித டிஎன்ஏ-வில் டேட்டா ஸ்டோரேஜ் எதிர்காலத்தில் சாத்தியமா?

கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து வருவதால் கூகுள் உள்ளிட்ட பல தனியார் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆன்லைன் கிளவுட் டேட்டா ஸ்டோரேஜ் வசதியை வாடிக் கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. ஆன்லைன் கிளவுட் டேட்டா-க்களை உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து தகவல்களை எடுத்துக்கொள்ள முடியும். எனவே இதற்கு வரவேற்பு அதிகரிக்கிறது. அதே சமயத்தில் ஹார்ட் டிஸ்க் போன்ற மின்னணு சாதனங்களில் ரகசிய டேட் டாக்களை பதிவேற்ற பலர் விரும்புகின்றனர். 

உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் எடுக்கும் போட்டோ, வீடியோக்களை சேவ் செய்ய இந்த மெமரியே போது மானது! 

டேட்டா ஸ்டோரேஜ் தொழில்நுட் பத்தில் இன்னும் பலவித ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. எதிர்காலத்தில் மனித டிஎன்ஏ மாலி கியூல்களில் டேட்டாக்களை ஸ்டோர் செய்ய முடியும் என்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள். இதனைக் கேட்பதற்கு சயின்ஸ் பிக்சன் படத்தின் கதைபோல இருந்தாலும் டேட்டா ஸ்டோரேஜ் என் பது மனித இனத்துக்கு மிகவும் அவசிய மான ஒன்று என்பதால், எதிர்காலத்தில் இதுகூட சாத்தியப்படலாம். 

2025 ஆம் ஆண்டுதுவங்கி உலகம் முழுக்க உள்ள மனித இனத்துக்கு, ஆண்டுக்கு 160 செட்டாபைட் (gigabytes) மின்னணு டேட்டா ஸ்டோரேஜ் தேவைப்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஒரு செட்டாபைட் என்பது ஒரு லட்சம் கோடி ஜிகாபைட் (ரீவீரீணீதீஹ்tமீs) சேர்ந்தது ஆகும்!

No comments:

Post a Comment