பா.ஜ.க.வைத் தோற்கடிக்க எந்தத் தியாகத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் : அகிலேஷ் அறைகூவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

பா.ஜ.க.வைத் தோற்கடிக்க எந்தத் தியாகத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் : அகிலேஷ் அறைகூவல்

கொல்கத்தா, மார்ச் 20  உத்தரப் பிரதேசத்தில் பாஜக-வை சமாஜ்வாதி வீழ்த்தி விட்டால், நாடு முழுவதுமே அக்கட்சி வீழ்ந்து விடும் என்பதால், பாஜக-வைத் தோற்கடிக்க எந்தத் தியாகத்திற் கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ் அறைகூவல் விடுத்துள்ளார். 

உ.பி. மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ், இரண்டுநாள் பயணமாக   மேற்கு வங்கம் வந்தார்.  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை  அவரது இல்லத் தில் சந்தித்துப் பேசினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசி யிருக்கும் அவர், “பாஜகவைத்  தோற்கடிக்க திரிணா முல் காங்கிரஸ் தலைவர் மம்தா   சமாஜ்வாதி கட்சி துணை நிற்கும். மேற்கு வங்கத்தில் நாங்கள் மம்தாவுக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறோம். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சி களிடம் இருந்து சமதொலைவில் விலகி இருப்பதே இப்போதைய சூழ்நிலை யில் எங்கள் நிலைப்பாடு” என்று குறிப் பிட் டுள்ளார். 

அதைத்தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியினர் மத்தியில் அகிலேஷ் உரையாற்றியுள்ளார்.

அப்போது, “ஒன்றிய பாஜக அரசு விசாரணை அமைப்புகளைத் தவ றாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சி களைச் சேர்ந்தவர்களை தொந்தரவு செய்து வருகிறது. அமலாக்கத் துறை, சிபிஅய், வருமான வரித் துறை ஆகி யவை பாஜக-வின் அரசியல் ஆயு தங்களாக உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி தங்களை எதிர்ப்பவர் களை அச்சுறுத்துகின்றனர். அண் மையில் ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பல எதிர்க் கட்சித் தலை வர்கள் குறிவைக் கப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், சட்டமன்ற உறுப் பினர் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநிலங்களிலுமே எதிர்க்கட்சி களைச் சேர்ந்தவர்களிடம் பாஜக இந்த மோசமான அணுகு முறையையே பின்பற்றுகிறது'' என்று கூறியிருக்கும் அகிலேஷ்,  “நம்மால் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்திவிட முடியும் என்றால், நாடு முழுவதும் அக் கட்சியை வீழ்த்திவிட முடியும். பாஜகவை தோற்கடிக்க நாம் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக் கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, மம்தா உடனான அகிலேஷின் சந்திப்பு குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய, “தற்போது மூன்றாவது அணி பற்றி சிந்திக்க வில்லை. நாங்கள் உருவாக்குவதை மூன்றாவது அணி என கூற முடியாது. அதே நேரம், பாஜகவை வீழ்த்தும் வலிமை மாநில கட்சிகளுக்கு உள்ளது'' என்று  தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment