ஹிந்துத்துவாவை விமர்சித்து விட்டாராம் கன்னட நடிகர் சேத்தன் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

ஹிந்துத்துவாவை விமர்சித்து விட்டாராம் கன்னட நடிகர் சேத்தன் கைது

பெங்களூரு, மார்ச் 23 - கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் 20.3.2023 அன்று தனது டிவிட்டர்பதிவில், “ஹிந்துத்துவ அரசியல் என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. ‘ராவணனை ராமன் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பியபோது இந்திய தேசத்தை தொடங்கினார்’ என சாவர்க்கர் கூறியது மிகப்பெரிய பொய் ஆகும். பாபர் மசூதியில் ராமன் பிறந்தான் என்பதும் திப்பு சுல்தானை கொன்றவர்கள் ஊரிகவுடா-நஞ்சேகவுடா என கூறுவதும் பொய் ஆகும். பொய்களால் கட்டமைக்கப்பட்ட ஹிந்துத்துவ அரசியலை உண்மையால் தோற்கடிக்க முடியும்” என விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த பஜ்ரங் தளம் நிர்வாகி குமார் 21.3.2023 அன்று சேஷாத்ரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நடிகர் சேத்தனை உடனடியாக கைது செய்தனர். பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, அவரை சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment